பக்கம்:தந்தையும் மகளும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

39

தான், அங்குள்ள உஷ்ணம் ஐயாயிரம் டிகிரி இருக்கும். அந்த உஷ்ணம் மேலே தரைக்கு வந்து காற்றல் கலந்து மறைந்து போய்க்கொண்டே இருக்கிறது. அதனால் குழம்பின் உஷ்ணம் குறைந்து கொண்டே வருகிறது. உஷ்ணம் குறைந்தால் பொருள்கள் சுருங்கும் என்பதை நீ அறிவாய். அப்படிச் சுருங்கும் பொழுது தரை மெல்லியதாக உள்ள இடத்தில் வெடிப்பு உண்டாகும். அந்த வெடிப்பு வழியாக உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு வெளியே வந்து விடுகிறது. அப்படி வெளியே வரும் மண்குழம்பு குளிர்ந்து குவிந்து மலைகளாக ஆகி விடுகின்றன.

அலற்றின் சிகரங்கள் ஆழமான பள்ளங்கள் உடையனவாக இருக்கும். அந்தப் பள்ளங்களில் கல்லும் மண்ணும் இளகிக் குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில் திடீரென்று உள்ளேயுள்ள உஷ்ணம் அதிகமாய்விடும். அப்பொழுது குழம்பு மேலே கிளம்பிப் பொங்கி வழிந்து அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களை எல்லாம் அழித்துவிடும்.

சுமாத்திராத் தீவின் அருகிலுள்ள காராக்கடேரவா எரிமலை 1882-ம் ஆண்டில் திடீரென்று கல்லையும் மண்ணையும் கக்க ஆரம்பித்துவிட்டது. அந்தக் கல்லும் மண்ணும் 1600 மைல் தூரம் வரை போய் விழுந்தனவாம். அதன் முழக்கம் 20 மைல் தூரம் வரை கேட்டதாம்.

இவ்வாறு உள்ளே குழம்பாகக் கொதித்துக் கொண்டிருப்பதைக் கொண்டுதான் எரிமலைகள் என்று கூறுகிறார்கள். அத்தகைய மலைகள் ஆயிரம் உள, அவற்றுள் முன்னுற்றைம்பது இப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கின்றன.

28அப்பா! 'சில இடங்களில் சுடுநீர்ச் சுணைகள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?