46
தந்தையும்
முன் கூட்டித்தெரிந்து கொள்வார்கள். முன் கூட்டித் தெரிந்து கொண்டால்தான் கப்பல் அபாயமின்றிப் பிரயாணம் செய்ய முடியும. அதற்காக மாலுமிகள் ஹைட்ரோபோன் என்னும் கருவியை உபயோகிக்கிறார்கள். அது எப்படி என்று கூறுகிறேன், கேள்.
அம்மா!நாம் பேசினால் காற்றில் அலைகள் உண்டாகின்றன என்றும் அவை காதுக்குள் வந்து சேர்வதால்தான் சப்தம் கேட்கிறது
என்றும் நீ அறிவாய். கடலில் அலைகள் கரையில் மோதும் போது, கரையானது அலைகளைக் கடலுக்குள் திருப்பி விடுகின்றன. அதுபோல் நாம் பேசும் சப்தஅலைகளும் ஏதேனும ஒரு கட்டிடத்தில் மோதினால் அது அவற்றை நமக்கே திருப்பி அனுப்பி விடுகின்றன அப்பொழுது நாம் பேசியது மறுபடியும் நமக்குக் கேட்கிறது. இப்படித் திரும்பிவரும் ஒலியை எதிரொலி என்று கூறுவார்கள்.
ஒலியானது செல்லும் வேகத்தைத துல்லியமாக அளந்து ஒரு செக்கண்டு நேரத்தில் 1100 அடி தூரம் செல்வதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது ஐந்து செக்கண்டு நேரத்தில் ஒருமைல் தூரம் போவதாகக் கூறலாம்.
ஒலியானது சென்று எதிரொலியாகத் தீரும்பி வந்து சேர ஐந்து செக்கண்டு நேரம் பிடிக்குமானால் ஒலியைத் திருப்பி அனுப்பிய பொருள் அரைமைல் தூரத்தில் இருப்பதாகத் தெரிந்து கொள்ளலாம்.