பக்கம்:தந்தையும் மகளும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்னைப் பல்கலைக்கழகம் தாவர நூற்பேராசிரியர்
டாக்டர் டி. எஸ். சதாசிவம்
எம். எஸ். ஸி., பி. எச்.டி., (லண்;
முகவுரை

றிஞர் திருகூடசுந்தரம் அவர்கள் சிறுவர்கட்குப் பயன்படக்கூடிய விஞ்ஞான நூல்கள் பல இயற்றி வருவதை எல்லோரும் அறிவர். இப்பொழுது அவர்கள் எழுதியுள்ள “தந்தையும் மகளும்” என்னும் நூலுக்கு ஒரு முன்னுரை எழுதித் தருமாறு என்னைக் கேட்ட போது நான் திகைத்தேன். அவர்களுடைய பரந்த அனுபவத்துடனும், முதிர்ந்த அறிவுடனும் விஞ்ஞானம், உலகியல் இரண்டிலும் எனக்குள்ள அனுபவக் குறைவை ஒப்பிடும் பொழுது, என் திகைப்பு மிகவே செய்கின்றது. ஆயினும் அவர்களுடைய வேண்டுகோளைப் பெரியவர் சிறியவனுக்கு இடும் கட்டளையாக எண்ணி என் கருத்துக்களே எழுதுகின்றேன்.

இந்நூலில் பெளதிகம், ரசாயனம், உயிரியல், எஞ்சினீரிங், மருத்துவம், பூகோளம், புவியியல் முதலிய பல கலைகள் சம்பந்தமான விஞ்ஞான உண்மைகள் பலவற்றை மிகுந்த சாமர்த்தியத்துடன் தொகுத்து எளிய இனிய தமிழ் நடையில் வினா விடையாக அமைத்திருப்பது இந்நூலுக்குத் தனி அழகையும், பயனையும் அளிப்பதாக இருக்கிறது.

விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுடைய சிறுவர் எந்நாட்டவராயினும், எத்தகைய நாகரிகக் கலாச்சார நிலையில் உள்ளவராயினும், அவர்களுடைய வினாக்களுக்குத் தக்க விடை அளித்து அவர்களைத் திருப்தி செய்வது என்பது எளிதான காரியமன்று.

ஆனால் திரு. திருகூடசுந்தரம் அவர்களுடைய நூலிலுள்ள வினா விடைகளை ஒரு குடும்பத்தாரிடையே