பக்கம்:தந்தையும் மகளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தந்தையும்

உஷ்ணம் அளக்கும் தெர்மா மீட்டரை வைத்துப் பார்த்தால் உஷ்ணம் உண்டாவது தெரியும். குண்டூசி உலோகத்தால் செய்தது. உலோகங்கள் உஷ்ணத்தை எளிதில் கடத்திச் செல்லும் சக்தி உடையது. அதனால் நான் தேய்க்குமிடத்தில் உண்டாகும் உஷ்ணம் கன்னத்தில் வந்து சேர்கிறது குண்டூசி சுடுகிறது என்று கூறுகிறோம்.

37அப்பா டாக்டர் வைத்திருக்கும் தெர்மாமீட்டர் பாட சாலையில் உள்ளது போல் இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பாடசாலையில் இரண்டு விதமான தெர்மாமீட்டர் வைத்திருப்பார்கள். ஒன்று செண்டிகிரேட் தெர்மாமீட்டர் என்றும், மற்றொன்று பாரன்ஹீட் தெர்மா மீட்டர் என்றும், பெயர் பெறும். தெர்மா மீட்டரில் பாதரசம் அடைத்திருப்பது உனக்குத்தெரியும். அவ்வாறு பாதரசம் அடைத்த தெர்மாமீட்டரை முதல் முதலாகச் செய்தவர் பாரன்ஹீட் என்பவர். அதற்கு முன் சாராயத்தை அடைத்தே தெர்மாமீட்டர் செய்து கொண்டிருந்தார்கள். பாரன்ஹீட் தெர்மாமீட்டரில் நீர் ஐஸாக மாறும் உஷ்ண நிலையை 32°F என்றும் நீர் கொதிக்கும் உஷ்ண நிலையை 212°F என்றும் குறிப்பார்கள்.

செல்சியஸ் என்பவர் செண்டிகிரேட் தெர்மா மீட்டரைச் செய்தார், அதில் ஐஸ் டிக்கிரி O°c என்றும் கொதிநீர் டிக்கிரி 100°c என்றும் குறிக்கப்படும். இந்த செண்டிகிரேட் தெர்மா மட்டரைத்தான் விஞ்ஞான ஆராய்ச்சியில் உபயோகிப்பது வழக்கம்.

டாக்டர் வைத்திருப்பது பாரன்ஹீட் தெர்மா மீட்டரே. ஆனால் அது உடம்பின் உஷ்ண நிலையை அறிவதற்காக மட்டுமே உபயோகிக்கட்படுவதால் அதில் அதனடியிலுள்ள குமிழுக்கு மேலாக 95°F என்றும், உச்சியில் 110°F என்றும் குறித்திருப்பார்கள். மனித-