பக்கம்:தந்தையும் மகளும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

49

ருடைய உஷ்ண நிலை எப்பொழுதும் 98.4°F ஆகவே இருக்கும்.அதனால் அந்த இடத்தில் தெர்மாமீட்டரில் X

தெர்மாமீட்டர்

போன்ற ஒரு குறி இட்டிருப்பார்கள். சுரம் கண்டால் உஷ்ணநிலை ஏறும், ஆனால் அது 105 டிக்கிரிக்கு அதிகமாவதில்லை. உடல்நலம் குறைந்து உஷ்ண நிலை குறையும் பொழுதும் அது 96 டிக்கிரிக்குக் கீழே இறங்குவதில்லை. அதனால்தான் 96 முதல் 110 வரையே குறிக்கிறார்கள். அதனால்தான் டாக்டர்கள் இந்தத் தெர்மாமீட்டரை குளிர்ந்த நீரால் கழுவுகிறார்கள். கழுவும் நீர் அதிகச் சூடாக இல்லாமல் இருந்தாலும் கூட அதன் உஷ்ண நிலை 110 டிக்கிரிக்கு அதிகமாயிருக்கும், அதனால் தெர்மா மீட்டர் உடைந்து போகும்.

இதில் இன்னும் ஒரு வித்தியாசம் உண்டு. சாதாரணமான தெர்மாமீட்டரில் குமிழ் உஷ்ணமாகும் பொழுது பாதரஸம் மேலே ஏறும், குமிழ் குளிரும் பொழுது கீழே இறங்கிவிடும். ஆனால் டாக்டருடைய தெர்மாமீட்டரில் அப்படி நடைபெறாது. அதற்குக் காரணம் குமிழுக்கும் குழாய்க்குமிடையில் ஒரு குறுகிய வளைவு இருப்பதுதான்.

டாக்டர் தெர்மாமீட்டரை சிறிது நேரம் நோயாளியின் நாக்கின் அடியில் வைப்பார். அப்பொழுது பாதரஸம் விரிந்து குறுகிய வளைவில் நுழைந்து குழாய்க்குள் ஏறும். தெர்மாமீட்டரை வாயிலிருந்து எடுத்தால் உடனே

த-4