மகளும்
51
மட்டுமன்று, அமெரிக்கா, ஐரோப்பாவிலும் இந்த முறை தான் நடந்து வந்தது.
1827-ம் ஆண்டில் முதன் முதலாகத் தீக்குச்சி செய்யப்பட்டது. அதைப்பற்றி உன் அண்ணனுக்குச் சொன்ன "அப்பாவும் மகனும்" என்ற புஸ்தகத்திலுள்ள 241-ம் கேள்விக்குரிய பதிலைப்படித்துத் தெரிந்துகொள்.
39அப்பா! நிலக்கரியைத் தீப்பிடிக்க வைக்கக் கஷ்டமாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! அநேக பொருள்கள் தீப்பிடிக்கக் கூடியவையாயிருந்தாலும் அவைகளை எல்லாம் எளிதில் தீப்பிடிக்கும்படி செய்து விடலாம் என்று எண்ணாதே. ஒவ்வொரு பொருளுக்கும் தீப்பிடிக்கும் உஷ்ணநிலை என்று ஒன்று உண்டு. அந்த நிலையை அடைந்தால்தான் அதில் தீப்பற்றும்.
சில பொருள்களில் தீப்பற்றும் உஷ்ண நிலை குறைவாகவும் சில பொருள்களில் தீப்பற்றும் உஷ்ண நிலை அதிகமாகவும் இருக்கும். உஷ்ண நிலை குறைவாக உள்ள பொருள்கள் தான் எளிதில் தீப்பற்றும் உஷ்ண நிலை அதிகமாகவுள்ள பொருள்களைத் தீப்பிடிக்க வைப்பது கஷ்டமாயிருக்கும்.
மண்ணெண்ணெய் சிறிது உஷ்ணம் ஏற்பட்டால் கூடத் தீப்பிடித்து விடும். அதனால்தான் அம்மா! நீ மண்ணெண்ணெய் உள்ள இடத்துக்கு மறந்து போய்க்கூட கை விளக்கை எடுத்துக் கொண்டு போகாதே.
நிலக்கரியில் தீப்பிடிக்கும் உஷ்ண நிலை அதிகம், அதனால் தான் சாதாரணமான அடுப்புக் கரியில் தீப்பற்ற வைப்பதுபோல் நிலக்கரியில் எளிதில் தீப்பற்ற வைக்க முடிவதில்லை,
49அப்பா! அடுப்பில் விறகில் தீப்பற்ற வைப்பதற்கு அம்மா சிராய்களை உபயோகிக்கிறாளே, அதற்குக் காரணம் என்ன?