56
தந்தையும்
குறைகிறது. அதனாலும் சூடு கீழுள்ள நீருக்குச் செல்வதில்லை.
ஆனால் பாத்திரத்தின் அடியில் சுடவைத்தால் சூடான தண்ணீர் விரிந்து கனம் குறைந்து மேலே கிளம்பிச் செல்கிறது. மேலேயுள்ள குளிர்ந்த நீர் கீழ் நோக்கி வருகிறது. வ்வாறு பாத்திரத்திலுள்ள தண்ணீர் முழுவதும் சூடாகி விடுகிறது. இதற்காகத்தான் எதையும் நாம் அடுப்பின் மேல் வைத்துச் சூடாக்குகிறோம்.
46அப்பா! சூடாக்காமலும் கொதிக்க வைக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா ! எந்தத் திரவத்தையானாலும். ஆவியாக மாற்றுவதைத்தான் கொதிக்க வைத்தல் என்று கூறுகிறோம். தண்ணீரைச் சுடவைத்தால் அதன் உஷ்ண நிலை 212°F அல்லது 100° C டிக்கிரி ஆனதும் கொதிக்க ஆரம்பிக்கிறது. அதாவது அது திரவமாக இருந்த நிலையைவிட்டு ஆவி நிலையை அடைகிறது, இது தான் தினந்தோறும் நம்முடைய வீட்டில் நடைபெறுவது.
சில பொருள்கள் ளகுவதற்கும் கொதிப்பதற்கும் அதிகமான உஷ்ணம் தேவை. தங்கம் 1064°C டிக்கிரியில் இளகி 2530°C டிக்கிரியில் கொதிக்கும், திரவ ரூபமாயுள்ள பாதரஸம் கூட 357°C டிக்கிரியில்தான் கொதித்து ஆவியாக மாறும்.
ஆயினும் குறைந்த உஷ்ண நிலையில் கொதித்து ஆவியாக மாறும் சில பொருள்களும் உள. அம்மா! நீ ஹைட்ரோஜன் நைட்ரோஜன் ஆக்ஸிஜன் ஆகியவைகளை வாயுக்கள் என்றே கேட்டிருப்பாய். ஆனால் நீராவியைக் குளிர்ப்பித்து நீர் ஆக்குவதுபோல் அவைகளையும் குளிர்ப்பித்து திரவங்களாக ஆக்கி விடலாம். அந்தத் திரவங்கள் ஐஸைவீடச் சுமார் 180 டிக்கிரி குறைவான நிலைமையி-