பக்கம்:தந்தையும் மகளும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

59

என்பது, அது இரு பக்கமும் வெளியே வளைந்ததாக இருக்கும்.

சாதாரணமாக தட்டையாயருக்கும் கண்ணாடியில் ஒளிபட்டால் அதன் கதிர்கள் அப்படியே உள்ளே நேராகச் செல்லும். ஆனால் வளைந்த கண்ணாடியாகிய லென்ஸ் வழியாகச் சென்றால் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்லாமல் சாய்ந்து சென்று ஓரிடத்தில் ஒன்றாகச் சேரும். அக்கதிர்கள் தனித்தனியாக இருக்கும்போது. அவை நமக்கு அதிகச் சூடாகத் தெரியாது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்தால் நெருப்புப்போல் ஆய்விடும். அவை ஒன்றாகச் சேருமிடத்தில் ஒரு கடுதாசியைவைத்தால், அந்தக் கடுதாசியில் தீப்பற்றிக் கொள்ளும்.

பனிக்கட்டி மிகவும் குளிர்ந்த வஸ்துதான். அது நெருப்பை அணைத்து விடவே செய்யும், ஆயினும் அதையும் லென்ஸ்போல் மெல்லியதாகச் செய்து சூரிய வெளிச்சத்தில் பிடித்தால் அப்பொழுதும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பனிக்கட்டி வழியாகச் சென்று கடுதாசியில் தீப்பற்றும்படிச் செய்துவிடும். பனிக்கட்டி தவிர வேறு எதுவும் கிடையாத துருவப் பிரதேசத்துக்குச் செல்பவர் தீக்குச்சி தீர்ந்து போனால் இவ்விதமே நெருப்பு உண்டாக்கிக் கொள்வார்களாம்.

50 அப்பா ! இரும்பு ஆணி கிடைத்தாலும் ஆசாரி மரத்தாலும் ஆணி செய்து உபயோகிக்கிறாரே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மரத்தைவிட இரும்பு பலமுடையதாதலால் இரும்பு ஆணியை உபயோகிப்பதே நல்லது அல்லவா என்று நீ கேட்கிறாய். ஆம் அம்மா! இரும்பு ஆணிதான் பலமானது. ஆயினும் கதவுகளுக்குச் சட்டங்கள் சேர்க்கும் போது ஆசாரி மரத்தாலேயே ஆணி செய்து கொள்கிறார், அதற்குரிய காரணம் கூறுகிறேன் கேள்.