மகளும்
65
எதையும் கழுவுவதற்குச் சுடுநீரே ஏற்றது. அதைக் கொண்டே நன்றாகச் சுத்தம் செய்ய முடியும்.
57அப்பா! கண்ணாடி டம்ளரை தண்ணீருக்குள் போட்டு வேகவைத்தால் கீறுவதில்லை, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கண்ணாடி டம்ளரில் சூடான தண்ணீரை ஊற்றினால் டம்ளர் உடைந்து விடுகிறது. அதன் காரணம் யாது? பொருள்களைச் சூடாக்கினால் அவை விரியும் என்றும் குளிர்வித்தால் அவை சுருங்கும் என்றும் அறிவாய். ஆதலால் டம்ளரில் சூடான தண்ணீரை ஊற்றியதும் தண்ணீர் பட்ட இடம் விரியும், மற்ற இடம் விரியாதிருக்கும். அதனால்தான் டம்ளர் கீறிவிடுகிறது.
ஆனால் டம்ளரை நீரில் போட்டு வேக வைத்தால் டம்ளர் ழுழுவதும் விரிகிறது, அதனால் அது கீற மார்க்கமில்லை.
58 அப்பா! மண்ணெண்ணெய் பாட்டிலை எப்பொழுதும் மூடி வைக்கும்படி சொல்லுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! மண்ணெண்ணெய் பாட்டிலை மட்டுமில்லை, டிங்சர் பாட்டிலையும், ஸெண்ட் பாட்டிலையும் கூட மூடியே தான் வைத்திருக்க வேண்டும். அதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேள்.
அம்மா! தண்ணீர், தேங்காய்நெய் போன்ற திரவங்களைக் கொதிக்க வைத்தால் அவை ஆவியாக மாறும் என்பதை அறிவாய். அவை கொதிக்க வைக்காவிட்டாலும். எப்போதும் மெதுவாக ஆவியாகிக் கொண்டுதானிருக்கும். ஈரத்தரை உலர்ந்து போவது அதனால் தான்.
ஆயினும், தண்ணீர் போன்ற திரவங்கள் ஆவியாக மாறுவதற்குக் கொஞ்சமேனும் சூடு அவசியமானதே ஆனால் மண்ணெண்ணெய் போன்றவைகள் ஆவியாக மாறுவதற்கு அவ்வளவு உஷ்ணம் கூடத் தேவையில்லை.
த-5