பக்கம்:தந்தையும் மகளும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

69

யோகிக்கக்கூடாது. அதற்காகத்தான் மணலை வைத்திருக்கிறார்கள்.

தவிரவும், எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் மணல் கெட்டுவிடாது. தண்ணீர் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் எப்பொழுதும் மணலை நிறைத்து வைத்திருப்பதே நல்லது. வீடுகளில்கூட அவ்விதம் வைப்பது நலம்.

62அப்பா! பாவாடையில் தீப் பிடித்தால் வெளியே ஓடக் கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! வெளியேயும் ஓடக்கூடாது, வீட்டுக்குள்ளும் ஓடக்கூடாது. ஓடினால் தீ அதிகமாகப் பிடித்துக்கொள்ளும். அதற்குக் காரணம் என்ன? தீ எரியும். பொழுது எந்தப் பொருள் எரிகிறதோ, அது காற்றிலுள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமிலவாயு உண்டாகிறது. பிராணவாயு இல்லாவிட்டால் எதுவும் எரியாது. துணியில் தீப் பிடித்தவுடன் ஓடினால், நாம் தீ எரியும்பொழுது உண்டாகும் கரியமிலவாயுவை உடனுக்குடன் துணியை விட்டு அப்புறப்படுத்தி விடுகிறோம். அதனால் எரிவதற்கு வேண்டிய பிராணவாயு எரியும் பொருளுக்கு அதிகமாகக் கிடைத்து விடுகிறது. அதனால்தான் ஓடினால் தீ அதிகமாகப் பரவ நேர்கிறது,

ஆதலால் அந்த மாதிரி சமயங்களில் நாம் செய்ய வேண்டியது யாதெனில் தீ எரிவதற்கு வேண்டிய பிராண வாயு கிடையாமல் செய்வதுதான். அதற்காகப் பெரிய சமுக்காளமோ கம்பளியோ எடுத்து உடம்பு முழுவதும் போர்த்த வேண்டும். அவை இல்லாவிட்டால் உடனே தரையில் படுத்துப் புரளவேண்டும். சன்னல்கள் திறந்திருந்தால் அவைகளையும் வாசலையும் மூடிவிடுவது நல்லது.

தீ உடம்பில் பற்றாமல் வேறு பொருள்களில் பற்றினால் துணிகளாய் இருந்தால் தண்ணீரைக் கொட்டி அணைக்க-