74
தந்தையும்
முழுவதும் தெரியாமல் இருப்பது ஆபூர்வமாகும். சூரிய கிரகணத்தன்று சூரியன் அரைகுறையாகத் தெரியவே செய்யும். ஆயினும் சூரியனை நாம் பார்க்க முடியாது, நம்முடைய கண் கூசும்.
கண்கள் கூசாமல் சூரியனைப் பார்ப்பதற்காகவே புகையில் காட்டிக் கறுப்பாக்கிய கண்ணாடியை உபயோகிக்கிறார்கள். சாதாரணமாக ஒளியானது கண்ணாடி வழியாகச் செல்லக் கூடியது. அவ்விதம் கண்ணாடி வழி வரும் ஒளியும் கண்களைக் கூசும்படியே செய்யும். ஆனால் கறுப்பு நிறம் ஒளிக் கதிர்களைக் கிரகித்துக் கொள்ளும் குணமுடையது. ஆதலால் புகையில் காட்டிய கண்ணாடியை வைத்துக்கொண்டு பார்க்கும் பொழுது புகையின் கருமை சூரிய வெளியில் பெரும் பாகத்தை உண்டுவிடுகிறது. அதனால் கண் கூசாமல் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிகிறது.
68அப்பா! சிலர் கறுப்பு மூக்குக் கண்ணாடி அணிகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! வெளியே போகும்போது வெயில் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது அல்லவா? அத்தகைய ஒளியை அதிக நேரம் பார்க்கும் பொழுது கண்கள் நோவும. அது இல்லாமல் இருப்பதற்காகவே கறுப்பு நிறமான கண்ணாடியுள்ள மூக்குக் கண்ணாடிகளை உபயோகிக்கிறார்கள்.
அம்மா! வெள்ளை நிற ஒளியைக் கிரகிப்பதில்லை என்பதையும், கறுப்பு நிறம் ஒளியைக் கிரகித்துவிடும் என்பதையும் நீ அறிவாய். அதனால் சாதாரணக் கண்ணாடி மூலம் ஒளி முழுவதும் கண்ணுக்குள் வந்து கஷ்டம் தரும். மூக்குக் கண்ணாடியிலுள்ள கண்ணாடி சிறிதளவு கருமை கலந்ததாக இருந்தால் அதன் வழியாக ஓரளவு ஒளியே