பக்கம்:தந்தையும் மகளும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

75

கண்ணுக்கு வந்து சேரும். அதனால் கண்ணுக்குக் கஷ்டமாயிராது, இதமாயிருக்கும்.

69அப்பா! மின்சார விளக்கை ஈரக்கையால் தொடக்கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அது அபாயகரமானது, மறந்து போய்க் கூட அப்படிச் செய்யக்கூடாது. மின்சார விளக்குப் போடுவதற்காக ஒரு ஸ்விட்ச் இருக்கிறதல்லவா? அதன் மூடியைத் திறந்து பார்த்தால் இரண்டு முனைகள் ஒன்றையொன்று தொடாமல் விலகி நிற்பது தெரியும் நாம் ஸ்விட்சைப் போடுவது அந்த இரண்டு முனைகளையும் தொடும்படி செய்வதற்காகத்தான். இவை இரண்டும் தொட்டவுடன் அதில் மின்சாரம் ஒட ஆரம்பிக்கிறது. மின்சாரம் அதன் வழியாகப் பல்புக்குச் சென்று விளக்கை வெளிச்சம் தரும்படிச் செய்கிறது.

மின்சாரம் நம்முடைய உடம்பில் பாய்ந்தால் மரணம் உண்டாகும் என்பதை அறிவாய். அதனால் அந்த இரண்டு முனைகளும் தொட்டுக்கொண்டிருக்கும் போது மின்சாரம் ஓடுவதால் அதை நாம் தொடக்கூடாது. அதற்காகத்தான் ஸ்விட்சில் மூடி போட்டு வைத்திருக்கிறார்கள். நாம் ஸ்விட்சிலுள்ள குமிழைக் கொண்டுதான் இரண்டு முனைகளையும் தொடச் செய்கிறோம். சில சமயங்களில் மின்சாரம் ஓடும் கம்பிகளில் பழுது ஏற்பட்டிருந்தால் அப்பொழுது மின்சாரம் ஸ்விட்சின் குமிழுக்கும் வந்து விடலாம்.ஆனால் அது மிகச் சிறிய அவ்வாகவே இருக்கும்.

ஆயினும் நீ ஈரக்கையோடு அந்தக் குமிழைத் தொட்டால், அப்பொழுது குமிழிலுள்ள மின்சாரம் உடம்பில் பாய்ந்து கேடு உண்டாக்கும். அதனால்தான் ஈரக்கையோடு ஸ்விட்சைப் போடக்கூடாது என்று கூறுகிறார்கள்.