78
தந்தையும்
சாதாரண பல்புபோன்ற மேல் பாகத்து வழியாகக் கூரைச்குச் சென்று அங்கிருந்தே சிதறிவரும். இத்தகைய விளக்கே அனைத்திலும் சிறந்ததாகும்.
71அப்பா! எண்ணெய் விளக்கிலுள்ள திரி முழுவதும் எரிந்து அணைந்துவிடுவதுபோல் மின்சார விளக்கில் அணையவில்லையே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! எண்ணெய் விளக்கில் எண்ணெய் திரியில் ஏறி ஆவியாக மாறி அதுவும் திரியும் சேர்ந்து எரிகிறது. எரிதல் என்பது பிராண வாயுவுடன் சேர்ந்து வேறு பொருள் ஆதல் என்று பொருள். அதனால் எண்ணெய்யும் திரியும் காற்றிலுள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமல வாயு முதலிய வேறு பொருள்களாக மாறி காற்றில் கலந்து விடுகின்றன. அதனாலதான் இறுதியில் எண்ணெய் யும் திரியும் இல்லாமல் ஆகிவிடுகின்றன.
ஆனால் மின்சார விளக்கில் எதுவும் எரிவதில்லை. அதிலுள்ள மெல்லிய நூல்போன்ற கம்பி பிரகாசிக்கிறது. ஆயினும் அது எரிவதினால். எரிவதற்குப் பிராணவாயு வேண்டுமே, மின்சார விளக்கில் கிடையாது. பிராண வாயுவை வெளியாக்கிவிட்டு நைட்ரோஜன், ஆர்கன் என்னும் வாயுக்களையே அடைத்து வைக்கிறார்கள்.
அப்படியானால் ஒளி உண்டாவது எப்படி என்று கேட்பாய். மின்சார சக்தி சில பொருள்கள் மூலமாகவே செல்லக்கூடியது. அத்தகைய பொருள்களும் அதன் ஓட்டத்தைத் தடுக்கவே செய்கின்றன. அவை அதிக மெல்லியதாக இருந்தால் அந்தத் தடையும் அதிகமாய் விடுகிறது. அப்பொழுது அந்த மெல்லிய பொருள் சூடாகி ஒளிவிடத் தொடங்குகிறது. அது இவ்விதம் பிராணவாயுவுடன் சேராமலே நமக்கு வெளிச்சம் தருகிறது. அதனால்தான் அது திரிபோல் எரிந்து இல்லாமற் போய் விடுவதில்லை.