பக்கம்:தந்தையும் மகளும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தந்தையும்

வெள்ளி, செம்பு, நாகம் முதலிய உலோகங்களைக் கொண்டும் பூசுவார்கள்.

73அப்பா! அமெரிக்காவில் ஐம்பதுமாடி வீடுகள் கட்டுகிறார்களாமே, அது இடிவிழுந்து பாழாய் விடாதா?

அம்மா! மேகங்களிலுள்ள மின்சார சக்தி மழைத் துளிகளுடன் கீழே பூமிக்கு இறங்குவதைத்தான் நாம் இடி விழுவதாகக் கூறுகிறோம்

அப்படி மின்சார சக்தி இறங்குமிடத்தில் வஸ்துக்கள் இருந்தால், எதன் மூலம் எளிதாக இறங்க முடியுமோ அதன் மூலமாகவே இறங்கும். மரத்தூடும் மண்ணூடும் செல்வதினும் இருப்பினூடு அதிக எளிதாகச் செல்லும். அதனால்தான் உயர்ந்த கட்டடங்களின்மீது கூர்மையான இரும்புத் தடியை நட்டுவைத்து அத்துடன் மெல்லிய கம்பியை இணைத்து அதைப் பூமியில் அதைப் பூமியில் கிணற்றுக்குள் கொண்டுபோய் விட்டிருப்பார்கள். மின்சார சக்தி இரும்புத் தடி வழி இறங்கிக் கிணற்றுக்குள் பாய்ந்துவிடும்.கட்டடம் சேதம் அடையாது. இந்த விதமான தடி "இடி விலக்கி" என்னப்படும். . இதே காரணத்தினால்தான் அமெரிக்காவில் கட்டும் உயர்ந்த மாடிவீடுகள் மீது இடி விழுவதில்லை- அந்த வீடுகள் எஃகுக் கம்பியில் சிமிண்டு பொதிந்து ஆக்கப் பட்டவையாயிருத்தலால், மேகங்களிலிருந்து இறங்கும் மின்சார சக்தி வீட்டிலுள்ள எஃகுக்கம்பி வழியாகத் தரைக்குச் சென்றுவிடும். கட்டடத்திற்கு எவ்விதப் பழுதும் உண்டாகாது. ஆகவே அங்குள்ள மாடி வீட்டிலுள்ள எஃகுக்கம்பி இடிவிலக்கி போல் வேலை செய்து விடுகிறது.

74அப்பா! மெர்க்குரி விளக்கு என்று கூறுகிறார்களே, அது எப்படி எரிகிறது?