பக்கம்:தந்தையும் மகளும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

81

அம்மா! நமது நாட்டில் கிராமங்களில் எண்ணெய் ஊற்றித் திரிபோட்டுத்தான் விளக்கு எரிக்கிறார்கள்.முன்காலத்தில் ஆமணக்கு நெய், தேங்காய் நெய் போன்ற எண்ணெய்களை உபயோகித்தார்கள். இப்பொழுது மண்ணெண்ணெய் உபயோகிக்கிறார்கள். தீக்குச்சியைக் கிழித்து வைத்தவுடன், திரியில் ஏறி நிற்கும் எண்ணெய் ஆவியாகி காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்கிறது. அப்பொழுது உஷ்ணமும் ஒளியும் உண்டாகின்றன. இதைத்தான் விளக்கு எரிவதாகக் கூறுகிறோம்.

ஆனால் பட்டணங்களில் உபயோகிக்கும் மின்சார விளக்குகளில் எண்ணெய்யும் கிடையாது, திரியும் கிடையாது. அதனால் எதுவும் பிராணவாயுவுடன் சேர்வதில்லை. மின்சாரம்தான் மெல்லிய கம்பி வழியாகச் சென்று அந்தக் கம்பியை ஒளி வீசும்படிச செய்கிறது.

அது போன்றதே மெர்க்குரி விளக்கு என்பதும்' ஆனால் அதில் மெல்லிய கம்பிக்குப் பதிலாக ஆங்கில்த்தில் மெர்க்குரி என்னும் பாதரஸமே இருக்கும். மின்சாரம் அதை ஆவியாக மாற்றி ஒளிரும்படி செய்யும். அதன் ஒளி நீல நிறங்கலந்த வெண்மையாக இருக்கும். இந்த ஒளியில் கிருமிகளைக் கொல்லக்கூடிய சக்தி இருப்பதால் இதை டாக்டர்கள் நோய்களைக் குணப்படுத்த உபயோகிக்கிறார்கள்.

75அப்பா! சென்னையில் அழகான விளம்பர விளக்குகள் போடுகிறார்களே, அதை எப்படிச் செய்கிறார்கள்?

அம்மா! சாதாரணமாக வீடுகளில் எரியும் மின்சார விளக்கில் மின்சாரமானது டங்ஸ்டன் என்னும உலோகத்தால் செய்த மெல்லிய கம்பி வழியாகச் சென்று அந்த கம்பியை ஒளிவிடும்படி செய்யும்.

த-6