பக்கம்:தந்தையும் மகளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

83

யாக ஓடுகிறது. அப்பொழுது விளக்கிலுள்ள கம்பி அதிகச் சூடாகி ஒளி விடுகிறது. நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது.

விளக்கிலுள்ள கம்பியை டங்ஸ்டன் என்னும் உலோகத்தால் செய்கிறார்கள். அந்த உலோகம் எளிதில் இளகுவதில்லை.அதனால் தான் அது அதிகச் சூடேறினாலும் இளகாமல் ஒளி தந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அதிகமான மின்சார சக்தி செம்புக் கம்பி வழியாகச் செல்லுமானால் அப்பொழுது நெருப்பு உண்டாகி விடும். அதைத் தடுக்கும் பொருட்டே "பியூஸ்” என்பதை வைத்திருக்கிறார்கள். அது எளிதில் இளகக் கூடிய கலப்பு உலோகத்தால் செய்யப்படுகிறது. அதிகமான மின்சாரம் வருமானால் அது இளகிவிடும். மின்சார சக்தி வீட்டுக்குள் போக முடியாமல் போகும். நெருப்பு அபாயம் உண்டாகாது.

77அப்பா! அணுக்களையும் விடச் சிறிய பொருள்கள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! ஒரு பொருளைச் சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டே போனால் கடைசியாகப் பிரிக்க முடியாத ஒரு நுண்ணிய துண்டு கிடைக்கும். அதைத்தான் அணு என்று கூறுவார்கள். அதை நாம் பூதக் கண்ணாடியாலும் பார்க்க முடியாது. பெரிய பூதக் கண்ணாடியால் மட்டும் பார்க்கக்கூடிய மிகச் சிறிய பொருள் அணுவைப்போல் ஐயாயிரம் மடங்கு பெரியதாக இருக்கும். அதனால் அணுதான் உலகில் காணப்படும் மிகச் சிறிய பொருள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இது வசை பிரிக்க முடியாது என்று எண்ணி வந்த அணுவை இப்பொழுது அறிஞர்கள் பிரித்து விட்டார்கள். அது எலக்ட்ரான்கள் என்னும் மின்சாரத் துகள்களால்