84
தந்தையும்
ஆனதாயிருக்கின்றது. அதனால் எலக்ட்ரான் தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் எல்லாம் மிகச் சிறியதாகும். ஒரு பந்தானது தூசியை விட எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது எலக்ட்ரானை விட அணு.
78அப்பா! கையால் தூக்கமுடியாத கல்லை கடப்பாரையால் தூக்கிவிடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நமக்கு குறிப்பிட்ட ஒரு அளவு பலம் தான் உண்டு, அதைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவு பளுவுள்ள பொருள்களைத் தான் தூக்கமுடியும். நம்முடைய பலத்துக்கு மேற்பட்ட பளுவுள்ள பொருள்களைத் தூக்க வேண்டுமானால் வேறு துணை தேடிக்கொள்ள வேண்டியது தான். அதற்காக வேறு ஆட்கள் யாரையும் அழைக்க வேண்டியதில்லை. தக்க கருவிகளைப் பயன் படுத்தினால் போதும். கடப்பாரையும் அந்தக் கருவிகளுள் ஒன்று.
அதைக் கொண்டு எப்படிப் பாரமான கல்லைத் தூக்க முடிகிறது? பெரிய கல்லின் அருகில் ஒரு சிறிய கல்லை வைத்து அதன் மேலாகக் சுடப்பாரையின் ஒரு முனையைப்பெரிய கல்லின் அடியின் வைத்துக்கொண்டு மறு முனையைப் பிடித்து அழுத்தினால் கல் எளிதாக எழும்புகிறது. அப்படிச் செய்யும் பொழுது கவனித்துப்பார். நாம் கடப்பரையை அதிக தூரம் அழுத்தும் பொழுது கல் சிறிது தூரம்தான் எழும்புகிறது. ஆனாலும் கையால் எழுப்ப முடியாத கல் கடப்பாரையால் எளிதாக எழும்பி விடுகிறதல்லவா? இந்த மாதிரி ஒரு கோலை ஆதாரமான ஒன்றின் மீது வைத்து கோலின் ஒரு முனையில் உபயோகிக்கும் பலத்தைக் கொண்டு மறு முனையில் ஒரு வேலையைச் செய்தால் அந்தக் கோலுக்கு நெம்பு கோல் என்று பெயர்.
79அப்பா ! சோப்பை நீரில் கரைத்து அதில் குழாய் வழியாக ஊதினால் குமிழிகளாகப் பறக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?