மகளும்
91
மிகவும் நீண்ட புகைபோக்கிகள் கட்டி புகையையும் கரியமில வாயுவையும் மேலே போகும்படி செய்கிறார்கள். அவைகள் அங்குள்ள காற்றோடு கலந்து விடுகிறது.
87அப்பா! ஒரு கடுதாசியைக் கிழித்து காற்றில்விட்டால் அது சீக்கிரம் தரைக்கு வந்து சேர்வதில்லை, ஆனால் அதையே சுருட்டிவிட்டால் உடனே கீழே வந்து விழுந்து விடுகின்றது, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! எந்தப் பொருளையும் பூமியானது தன்னிடத்தில் இழுக்கும் சக்தி உடையது என்பதை நீ அறிவாய் அல்லவா? அதனால் பூமி விரிந்த கடுதாசியையும் கீழே விழும்படி இழுக்கவே செய்கிறது. ஆனால் காற்று அப்படி விழுவதை எதிர்த்துத் தடுக்கிறது. அந்த எதிர்ப்பு பொருளின் பரப்புககுத் தக்கபடியாக இருக்கும். சுருங்கிய பொருளைத் தடுப்பதைவிட அகனற பொருளை அதிகமாகத் தடுக்கும். அதனால்தான் கடுதாசியை விரித்து விட்டால் தரைக்குச் சீக்கிரம் வந்து சேர்வதில்லை. பந்து போல் சுருட்டிய கடுதாசியின் பரப்பு. குறைவாக இருப்பதால் அது கையிலிருந்து விட்டவுடனேயே கீழே வந்து விழுந்து விடுகிறது.
இந்த உண்மையை அறிந்துதான் ஆகாய விமானிகள் அபாயம் நேர்ந்தால் ஆகாய விமானத்திலிருந்து மெதுவாக அபாயமின்றிக் கீழே வந்து சேர்வதற்காகப் "பாரச் சூட்" என்னும் ஒரு கருவியை உபயோகிக்கிறார்கள். அது ஒரு பெரிய குடைபோன்றிருக்கும். அதை விரித்தால் அதில் உட்காருவதற்கேற்ற ஒரு இருக்கை காணப்படும். அதில் உட்கார்ந்து குடையை விரித்தால் காற்று குடையை எதிர்த்து அதையும் அதில் உட்கார்ந்துள்ள ஆகாய விமானியையும் மெதுவாகவே தரைக்கு வந்து சேரும்படி