மகளும்
95
ஆனால் பாலில் தண்ணீரைச் சேர்த்தால் இரண்டிலும் இடைவெளிகள் ஒன்று போலவே இருப்பதால் தண்ணீரின் மூலக்கூறுகள் பாலின் இடைவெளிகளில் நுழைந்து கொள்கின்றன. அதனால்தான் தண்ணீர கண்ணுக்குத் தெரிய வில்லை. எல்லாம் பால் போல் வெள்ளை நிறமாகவே தெரிகிறது.
ஆயினும் பாலின் மூலக்கூறுகளைப் போலவே தண்ணீரின் மூலக்கூறுகளும் அதிகமாக அசைவதால் அவை சர்க்கரை மூலக்கூறுகளைப் போல பாலின் இடைவெளிகளுக்குள் அடங்கி விடுவதில்லை. அதனால்தான் பாலில் தண்ணீர் சேர்ததால் பாலின் அளவு அதிகமாகத் தெரிகிறது.
91அப்பா! செங்கல்வண்டி குடை சாய்வதில்லை, வைக்கோல் வண்டி குடை சாய்கிறது, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! வித்தை செய்கிறவர்கள் தாம்பாளத்தை எடுத்து அதை ஒரு விரல் நுனியில் நிறுத்துவதைப் பார்த்திருப்பாய். அது அப்படியே நிற்கும். அதைச் சுற்றிக்கூட விடுவார்கள். அப்பொழுது அது விரல் நுனியில் விரைவாகச் சுற்றவும் செய்யும். அப்படி அது கீழே விழுந்து விடாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
அம்மா! பூமிக்கு ஆகர்ஷண சக்தி உண்டென்றும் அதைக் கொண்டு பூமி சகல பொருள்களையும் தன்னிடத்தே இழுத்துக் கொள்கிறது என்றும் நீ அறிவாய். அதுபோல் பூமி தாம்பாளத்தையும் இழுக்கிறது. தாம்பாளத்தில் எந்தப் பாகத்தை இழுக்கிறது? சகல பாகங்களையும்தான். ஆயினும் தாம்பாளத்தின் கனம் முழுவதும் விரல் நுனியுள்ள இடத்திலேயே குவிந்து இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் தாம்பாளத்தை அந்த இடத்தில் நிறுத்த முடிகிறது. அப்படி ஒரு வஸ்துவின் கனம் முழுவதும் எந்த இடத்தில் குவிந்திருப்பது