பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

144


சென்றாலும், கட்சிக்குக் கெட்ட பெயர் தேடித்தரக் கூடியவர்களே! ஆகையால் இவர்கள் போவதுதான் நல்லது. கட்சியே இவர்களை வெளியேற்றுமுன், தாமே சென்றுவிட்டது அவர்களுக்கே நல்லது! இன்னும் இம்மாதிரி, வெளியேற்றப்படவேண்டிய சிலர் இருக்கிறார்கள்; அவர்களும் போய்விட்டால் நீதிக்கட்சிக்கு உதவியவர் ஆவார்கள்! இப்படிக் குடியிருந்த வீட்டுக்கு கொள்ளி வைக்கும் ஆட்களுக்குப் புகலிடமாய்க் காங்கிரஸ் இருப்பதும் மகிழ்ச்சியே!” எப்படி?

பதவி ஏற்ற காங்கிரசார் வாக்குறுதிகளை மறந்தனர்; கொள்கைகளை மறந்தனர்; செயல்பட மறந்தனர்; மொத்தத்தில் வந்த வேலையை மறந்தனர்; மக்களையே மறந்தனர்! தவறு கண்டவிடத்துத் தயவு தாட்சண்யம் பாராமல் தட்டிக் கேட்கும் பெரியாரின் இயல்பு பீரிட்டுக் கிளம்பிற்று. “விடுதலை”யும், “குடி அரசும்” வெடிகுண்டுகளாக வீசின!