பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஒரு கூட்டம் நடந்தது. காமராசர் அங்கே சென்று அதில் கலந்து கொண்டிருந்தபோது பெரியார் நேருவுக்கும் காமராசருக்கும் அவசரத் தந்திகள் அனுப்பினார்:- “தட்சிணப் பிரதேசம் ஏற்படுவதேன்பது தமிழர்களுக்கு வாழ்வா சாவா என்பது போன்ற உயிர்ப் பிரச்சினையாகும். உங்களுக்கும் மற்றெல்லாருக்கும் இது தற்கொலையானதும் ஆகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகி விடும். அருள் கூர்ந்து நம் எல்லாரையும் தமிழ் நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன்.” பின்னர், 23.2. 1956ல் காமராசரே தீங்கையுணர்ந்து தட்சிணப் பிரதேச யோசனையை நிராகரித்தார். அக்டோபரில் இருந்து 15 மொழிவாரி மாகாணங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இந்திய யூனியன் ஆட்சிக்குக் கீழே தனித்தனியே இயங்கும் என்பதாக அரசு ஆணையும் பிறப்பித்தது. மொழிவாரி மாகாணம் வேண்டுமென்பதாக, வெள்ளையன் தனது நிர்வாக வசதிக்காக வைத்திருந்த அப்போதைய அமைப்பு முறையைக் குறை கூறித், தாங்களாகவே, 21 மொழிவாரி காங்கிரஸ் கமிட்டிகளைக், காந்தியாரே ஏற்படுத்தினார். அவ்வாறு ஏற்படுத்திய முதல் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகப் பணி தொடங்கியவரே பெரியார்தான்! அப்படியிருக்க, இப்போது ஏன் மொழிவாரி அரசியல் நிர்வாக அமைப்புக்கு அவர்களே இடையூது செய்கிறார்கள்? என்று வினவினார் பெரியார்.

திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 17.3.1955 அன்று பெரியார், மனிதனுடைய வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட இலட்சியம் இல்லாமல் போய் விட்டதாக வருந்தினார். “வாழ்க்கை ஏணியின் முதல் படிகளில் கால் வைக்கும் போதே நாம் எதற்காக ஏறுகிறோம்? ஏறினால் எங்கே போய்ச் சேர்வோம்? என்பதெல்லாம் யோசிப்பதில்லை! பிள்ளை பெறுவதை ஒரு லட்சியமாக நினைக்கிறோம். பிள்ளை பிறந்த பின் கல்விப் பயிற்சி தருவதை இலட்சியமாக எண்ணுகிறோம். படிப்பு முடிந்தால் உத்தியோகம் - தேடுவதை இலட்சியமாகக் கருதுகிறோம். உத்தியோகம் எதற்கென்றால்; பொருள் சம்பாதிக்க! இப்படியே போனால், ஒரு இலட்சியத்தை அடைவதென்பதே இல்லாமல் போய் விடுகிறதே!

ஒருவன் வாழ்வதென்பது, அவன் வாழ்க்கையால் பிறர் சுகம் கண்டார்கள்; பிறர் நன்மையடைந்தார்கள் என்று இருக்க வேண்டும்! இதுதான் முக்கியமானது. மனித வாழ்க்கையின் தகுதியான 1 இலட்சியம் இதுதான் என்றும் கூறலாமே” என்றெல்லாம் பெரியார் கூறினார்.

அண்ணாமலை நகரில் பல்கலைக் கழக மாணவர்களுக்காக 19.2.1956 ல் பெரியார் பேசிய கருத்துக்கள் மாணவ சமுதாயத்தின்