பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

359



தமிழ் தேசியக் கட்சி, தானும் நகரசபைத் தேர்தல்களில் போட்டி விடுவதாக அறிவித்தது. ஈரோடு நகரமன்றத் தலைவராயிருந்த ஆர். கே. வெங்கடசாமி நாயக்கர் 8.1.64 அன்று மரணமடைந்தார். இவரது மாமனார் கரிவரதசாமி நாயக்கர் "குடி அரசு" கேஷியராக இருந்து பணியாற்றி வந்தவர். பெரியார் படத்துடன் “விடுதலை” காலண்டர்கள் வெளி வந்து விற்பனை ஆயின. குடி அரசு, பகுத்தறிவுப் பதிப்பக வெளியீடுகள், திருச்சி பெரியார் மாளிகையில் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. பம்பாய் இல்லுஸ்ட்ரேடட் வீக்லி' தெழில், கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பில், பெரியார், "நமது முன்னேற்றத்திற்குத் தடை - இந்து மதம், பார்ப்பனர், ஜனநாயகம் ஆகியைவைதான்" என்று ஆணித்தரமாகக் கூறியிருந்தார். - 26.1.64 - அன்று விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பெரியார் காமராஜரால் தான் சமதர்ம ஆட்சியே மலர்கிறது என்று பேசினார். பொங்கல் வாழ்த்துச் செய்தியில், காஃபி சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திப், பால், மோர் சாப்பிடும்படியும், இறைச்சியுணவை அதிகமாகச் சாப்பிடும் படியும் மக்களைக் கேட்டுக் கொண்டார். தனி நாடு எப்போது கேட்கப்பட்டது; ஏன் கேட்கப்பட்டது என்பதற்கான தமது விளக்கத்தினையும் பெரியார் அளிக்க முன் வந்தார். “தினமணி" போன்ற ஏடுகளில், தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து போனதாகக் கூக்குரல் எழும்பியதால், பெரியார் அதை மறுத்துக் - கல்வித்தரம் குறைந்து போனதாகக் கூறுவது அறிவிலிகள் அல்லது பார்ப்பனக் கூலிகளின் குற்றச்சாட்டு" என்று வெகுண்டெழுந்து விளம்பினார்.

ஆந்திர மாகாணத்தில், பஸ்ரூட்டுகள் வழங்கப்பட்டது. சம்பந்தமாக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்று, மாநில அரசுக்கு விரோதமாக வழங்கப்பட்டதால், முதல் மந்திரியாயிருந்த நீலம் சஞ்சீவரெட்டி, தமது பதவியை ராஜினாமா செய்து, மேலிடத்துக்குக் கடிதம் வரைந்தார். இந்த ராஜினாமாவை மேலிடம் ஒப்புக் கொள்ள வேண்டாம். உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படிச் செய்வதே தவறு என்று பெரியார் வாதாடி, பிப்ரவரி 5,6 நாட்களில் "விடுதலை"யில் தலையங்கம் எழுதினார்.

நகரசபைத் தேர்தல் பிரச்சாரம், சூடாகவும் சுவையாகவும் இருந்தது. காங்கிரஸ், சுதந்தரா, முஸ்லிம் லீக், தி.மு.க. என்னும் கண்ணீர்த்துளிகள் இவர்களுக்கு ஓட்டுப் போடும் ஓட்டர்களுக்கு, ஓட்டு ஒரு கேடா? என்று ஆவேசமாகக் கேட்டார் பெரியார். 19.2.64 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில், அவரோடு டி.செங்கல்வராயன். கி.வீரமணி, சம்பத், கண்ணதாசன், பாலதண்டாயுகம் ஆகியோரும் பேசினர். “சுதேசமித்திரன்" ஏடு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கிண்டல் செய்து வெளியிட்ட கேலிச் சித்திரங்கள், “விடுதலை"யில் எடுத்தாளப்பட்டன. அதே போல “இந்தியன்