பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

433


ம.பொ.சி. க்கு மந்திரிப் பதவி தர வேண்டாம். அவர் ராஜாஜியின் கையாள் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தார், பெரியார். ராஜாஜிக்குத் தாமே முதல்வராக வர வேண்டுமென்ற நைப்பாசை இருந்தது என்ற செய்தி பெரியாருக்கும் தெரியும். மதுவிலக்குக் குற்றங்கள் பெருகி வரும் விவரப் பட்டியலை வெளியிட்டு, வெற்றி பெறாத மதுவிலக்கு இன்னும் வேண்டுமா? இது அண்ணாதுரைக்கு அர்ப்பணம் - என்றும் செய்தி வெளியிட்டார் பெரியார்.

இந்த ஆண்டில் பெரியாரின் முக்கிய பணியாகத் தஞ்சை மாவட்டத்தில், திருவாரூர்-தஞ்சை ரயில் மார்க்கத்தில், திருமதிக் குன்னம் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் செல்லக் கூடிய விடையபுரம் கிராமத்தில், சுயமரியாதைப் பகுத்தறிவுப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் மே மாதம் தொடங்கி நடைபெறும்; வரக்கூடியவர்கள் 24-ந் தேதிக்குள் வர வேண்டும் என்பதான அறிக்கைகள் “விடுதலை”யில் பிரசுரமாயின. நாகரசம்பட்டியில் மே 21-ல், என்.எஸ்.சம்பந்தம் அவர்களின் தங்கை, மற்றும் மகள் ஆகியோரின் திருமண விழாக்களில் பெரியார் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இரண்டும் தேவையில்லாத ‘வெள்ளையானைப் பதவிகள்.’ சிறுபான்மையினர் இந்த இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். அதிகாரமில்லாத அரசர் பட்டத்துக்கு வந்திருக்கிறார் என்றாலும் முன்னவர் முஸ்லீம், பின்னவர் பார்ப்பனர், பிரதம மந்திரியோ பார்ப்பனத்தி - என்று பெரியார் குறிப்பிட்டார். “மந்திரிகளே! மெல்லப் போங்கள்! ஜாக்கிரதையாக போங்கள்! அரிசிவிலை குறைந்தால்தான் மந்திரிகள் சம்பளம் வாங்குவோம் என்று சொல்லி விட்டதால், இப்போது எப்படியாவது சம்பளம் வாங்கிவிட வேண்டுமே என்பதற்காகத் தான் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி போடுகிறீர்கள் என்று மக்கள் பேசுவார்கள்! கூட்டுறவுச் சங்கங்களில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. கமிஷனர் போன்ற நிர்வாகதிகாரிகளைப் போட்டுக் கண்காணிக்க வேண்டும். ம.பொ.சி. விஷயத்தில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உரல் தேய்ந்து உளிப்பிடிக்கும் தகுதியற்றவாக ஆகிவிடக் கூடாது. தண்ணீர் எவ்வளவு தான் சூடாக ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் முடியும்; எரியச் செய்ய முடியாது! நம் நாட்டு அரசியல் வாழ்வு மிகக் கேடு கெட்டதாகி விட்டது. கட்சி மாறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றம் என்ன என்பதற்கு, நல்ல ரிக்கார்டு ஏற்படுத்த வேண்டும். சமுதாய சீர்திருத்தத்திற்கும் பார்ப்பனருக்கும் சம்பந்தமில்லை என்பதை உணரவேண்டும். ஜனநாயகத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லையே தொழிலாளர், மாலாவர், பார்ப்பனர் பிரச்சினைகள்தான் நாட்டின் கேடுகெட்ட நிலைக்குக் காரணம். ம.பொ.சி. அவர்களை அழைக்கின்றீர்களே;