பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

601


சுதந்திரம் கேட்கிறானோ, அவன் ஏழாண்டுகள் வரை தண்டிக்கப்படத்தக்க குற்றவாளியாக ஆக்கப்படுவான் என்ற சட்டம் உலகில் எந்த நாட்டில், தேசத்தில் இருக்கிறது?

அடுத்துச் சொல்கிறேன்; எவனொருவன் தேர்தலில் நிற்பதானாலும் 10,000 ரூபாய் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து தான் வெற்றியோ, தோல்வியோ அடைய முடியும் என்பது, எப்படி யோக்கியமான நிலையாகும்?

காலித்தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம்; அயோக்கியத்தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரகம் தான் பதவி பெற்ற கட்சிக்குத் துரோகம் செய்து விட்டு, எதிர்க்கட்சியின் ஆளாக ஆவது முதலியவை. எப்படி யோக்கியமான சுதந்தரமான இருக்க முடியும்?

பூரண சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகள் ஆனபின்பும் 54 கோடி மக்களில், ஆண்களில் 70 சதவீதம், பெண்களில் 82 சதவீதம் தற்குறி, கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள் என்றால், இதற்குப் பெயர் சுதந்தர ஆட்சியா? அடிமை ஆட்சியா? 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர் மேல்சாதி 97 பேராயுள்ள சூத்திரர் கீழ்சாதி என்ற நிலை நீடிக்கையில், இது சுதந்தரம் பெற்ற தேசமா? அடிமைச் சாசனம் பெற்ற தேசமா?

இதற்கு மேலும் நமது சுதந்திர நாள் விழாவைப்பற்றி விளக்குவதென்றால், மனம் மிகுந்த பரிதாபப்படுகிறது.

தோழர்களே! இப்படிப்பட்ட நிலைபற்றி எந்தக் குடிமக்களாவது வெட்கப்படுவதாக இருந்தால், நமது சமுதாயத்திற்குக் கேடாக உள்ள பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என உறுதி எடுத்துக்கொள்ளுவதன் மூலம் காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுதான் இன்று பொது மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளும் ‘இஞ்செக்ஷன்’ செய்தியாகும்.

துக்க நாள் ஒழிக! உண்மைச் சுதந்தர நாள் தோன்றுக!

தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கட்டாயமாக ஒவ்வொரு கோயிலிலும் அறங்காவலர் குழுவில் இடம் பெறவேண்டும் என்ற மசோதா 18-9-72 அன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. “விடுதலை” அலுவலகத்தில் பெரியாரிடம் 14 வயதில் அச்சுக்கோப்பாளராக வேலையில் சேர்ந்து Foreman ஆக உயர்ந்து, 25 ஆண்டு பணியாற்றியபின் ஓய்வு பெற்ற நாகேஷ் என்ற தோழருக்கு, ஊழியர்கள் சார்பில் அளிக்கப்பட்ட பிரிவுபசார விருந்தில் பெரியாரும், வீரமணியும் பங்கேற்று, வாழ்த்தினர். அரசவைக் கவிஞராக வீற்றிருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை , 24-8-72 அன்று மறைந்தார். கலைஞர் ஆட்சி இவருக்கு சிறப்பு ஊதியம் ஒன்று