பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தந்தை பெரியார்


காங்கிரசு தொண்டர்கள் தடை உத்தரவை மீறிச் செயல்பட வேண்டும் என்று சொன்னார்கள்.

ஈ.வே.ரா. நூறு தொண்டர்கள் தடை உத்தரவை மீறிச் செயல்பட வேண்டும் என்று சொன்னார்.

போலீசார் அவரையும் நூறு தொண்டர்களையும் கைது செய்தனர். நீதிமன்றம் அனைவருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கியது.

1921-ம் ஆண்டு நவம்பர் 21 நாள் ஈ.வே.ரா. முதன் முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் நகரம் முழுதும் கலவரம் பரவியது. ஈ.வே.ரா.வுக்குப் பிறகு யார் கள்ளுக் கடை மறியலை முன்னின்று நடத்தப் போகிறார்கள் என்று அரசாங்கம் அலட்சியமாக எண்ணியது.

புலியை முறத்தால் விரட்டிய விரத்தமிழ் பெண்களின் பரம்பரை வற்றிவிடவில்லை என்பதை அரசு விரைவிலேயே உணர்ந்தது.

ஈ.வே.ரா.வின் மனைவி நாகம்மையாரும், அவரது தங்கை கண்ணம்மாவும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் நகரெங்கும் பரவியது.

வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெளியே வந்தனர்.

நாகம்மையுடனும் கண்ணம்மையுடனும் கை கோர்த்துக் கொண்டு கள்ளுக்கடையை நோக்கி மறியல் செய்யப் புறப்பட்டனர்.