பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தந்தை பெரியார்


நாட்டில் நடைபெறும் அன்றாட விஷயங்களை, அதிகாலையில் மக்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கிற ஒரே சாதனம் பத்திரிகைதான்.

நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்பதையும்; நாடு நமக்கு என்ன செய்கிறது என்பதையும் பிற பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள்வதைவிட, நமக்காகவும்; மக்களுக்காகவும் நாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தால் என்ன என்று ஈ.வெ.ரா. ஆலோசித்தார்.

இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் அதற்கான காரியங்களில் தீவிரமாக முனைந்தார் ஈ.வெ.ரா.

1935-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி 'குடியரசு’ என்ற வார இதழை வெளியிட்டார் ஈ.வெ.ரா.

இப்பத்திரிகை, "சாதி, சமயம், மதம், அரசியல் இவற்றைக் கடந்து நடுநிலைச் செய்திகளை வெளி யிடும்” என்று ஈ.வே.ரா. அறிவித்தார். அப்படியே செய்தார்.

மிக விரைவில் குடியரசு பத்திரிகை பிரபலமாயிற்று.

சேரன் மாதேவி என்னும் ஊரில் காங்கிரசின் நிதி உதவியோடு, வ.வே. சுப்பிரமணிய ஐயர் என்பவர் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார்.

அந்த குருகுலத்தில் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இளம் பிள்ளைகள் மனதில், தேச பக்தி, தெய்வ பக்தி, ஒற்றுமை, சாதி, மதம், மொழி வேறு பாடில்லாமல், ஒருமைப்பாட்டு உணர்வை ஊட்டுவதே குருகுலத்தின் நோக்கம்.