பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

121


வந்திருந்த அனைவருக்கும் உணவு சமைப்பது முதல் பரிமாறுவது வரை, எல்லா வேலைகளையும் அரிசன தொண்டர்களைக் கொண்டுதான் ஈ.வெ.ரா செய்வித்தார். இந்தியாவில் இதுவே முதலாவதாகும்.


25. உலகம் சுற்றிய ஈ.வெ.ரா..

"நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்று நான் தொண்டாற்றுகிறேன்.

அதனாலேயே நம் மக்களுக்கு நன்மை செய்யக் கூடியவர்களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும், சமுதாயத்தின் நலன் கருதியே ஆதரிக்கிறேன்."

- தந்தை பெரியார்

தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகியது.

1931 - ம் ஆண்டு விருதுநகரில், மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தத் திட்டம் வகுத்தது.

ஈ.வெ.ரா. சமதர்மக் கொள்கையுடைய நாடுகளைக் காணவும்; மேலைநாட்டு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நேரில் கண்டறியவும், மேலைநாடுகள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

1931, டிசம்பர் 31ம் நாள் ஈ.வெ.ரா சென்னையிலிருந்து புறப்பட்டார்.