பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தந்தை பெரியார்


அந்தத் தலையங்கத்திலுள்ள ஆட்சேபகரமான விஷயங்களுக்காக ஆசிரியர் ஈ.வெ.ராவும்; அதனை அச்சிட்டதற்காக, ஈ.வெ.ராவின் தங்கை கண்ணம்மாவும் கைது செய்யப் பட்டார்கள்.

ஈ.வெ.ராவுக்கு ஆறுமாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

அப்பொழுது, அதே சிறையில், ஈ.வெ.ராவின் நண்பரான சி. இராசகோபாலாச்சாரியாரும் இருந்தார்.

இருவரும் சேர்ந்து பொதுச்சேவையில் ஈடுபடலாம் என இராசகோபாலாச்சாரியார் எண்ணினார். ஆனால் ஈ.வெ.ரா -

'என் வழி தனி வழி' என்று இருந்து விட்டார்.

அரசாங்கம் பகுத்தறிவு இயக்கப் பத்திரிகைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. பல பகுத்தறிவுப் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன; பல பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த சமயம், ஜஸ்டிஸ் கட்சியின் சிறப்புப் பேச்சாளராக விளங்கிய எம்.ஏ., பட்டதாரியான அறிஞர் அண்ணாவை, ஈ.வெ.ராவின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் வெகுவாகக் கவர்ந்தன.

1935 - ம் ஆண்டு திருப்பூர் மகாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவைச் சந்தித்துப் பேசிய அறிஞர் அண்ணா பொதுவாழ்வில் ஈடுபடத் தான் விரும்புவதாகக் கூறினார்.

சட்ட சபைக்கான தேர்தல் வந்தது.