பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தந்தை பெரியார்


திராவிடர் கழகத்தின் எதிர்காலம் குறித்தும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.

இச்செய்தியைக் கேட்டுக் கழகத்தினர் கலங்கிப் போயினர். இன்னது செய்வது என்று புரியாமல் திகைத்தனர்.

பெரியாருக்கு அப்போது வயது 70.

மணியம்மையாருக்கு வயது 26.

மணியம்மையாருடைய குடும்பத்துடன் பெரியாருக்கு நீண்டகால உறவு உண்டு.

மணியம்மையார் அருடைய சிறுவயது முதலே பெரியாரின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.

கட்சியில், பெரியாருக்கு உறுதுணையாக வாழ்வதோடு அவரது வாழ்விலும் பங்கேற்கவே விரும்பினார்.

இது 'பொருந்தாத் திருமணம்' என்று திராவிடக் கழகத்திலிருந்த பல பிரமுகர்களும், பேச்சாளர்களும் தொண்டர்களும் கூட எண்ணினார்கள்.

தயவுசெய்து அத்திருமணத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் பெரியார் எதையும் பொருட்படுத்தவில்லை. எப்பொழுதுமே, அவர் தம் மனசாட்சிக்குச் சரி என்று பட்டதைத் தயங்காமல் செய்வார்.

பிறகு யாருக்காகவும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார். மணியம்மையார் திருமண விஷயத்திலும் பெரியார் அப்படியே நடந்து கொண்டார்.