பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தந்தை பெரியார்


தோடு; அண்ணாவை எதிர்த்து தி.மு.க. மேடையிலேயே நாடெங்கும் பிரசாரம் செய்து, தி.மு.க. ஆட்சி அமைப்பதை எதிர்த்துப் பெரிதும் பாடுபட்டார்.

அறிஞர் அண்ணா, காங்கிரசின் பழைய பாரம்பரியத்திலிருந்து; கழகத்தின் முற்போக்கான புதிய பாதைக்குத் தமிழக மக்களை அழைத்துச் சென்று மகிழ்வூட்டினார்.

பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து போனதாக மற்றவர் கண்களுக்குத் தோன்றினாலும், பெரியாரின் ஆரம்பப் பள்ளியில் பயின்றவர் அண்ணா.

பெரியாரின் கொள்கைகளும்; முற்போக்குக் கருத்துக்களுமே அண்ணாவின் மனதிலும் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

நல்லவற்றை யார் செய்தால் என்ன? பெரியாரின் நகலாகவே அண்ணா தமது ஆட்சியில் புரட்சியை ஊட்டினார்.

'செகரடேரியட்' என்பது 'தலைமைச் செயலகமாக' மாறியது.

'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டது, 1967 - ஜூலை முதல் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டு சட்ட சபையில் நிறைவேறியது.

ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரிகள் - திரு, திருமதி, செல்வி என்று அழகு தமிழில் அழைக்கப்பட்டனர்.

பெரியாரால் நடத்திவைக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைத்தது. இப்படி 'எங்கும் தமிழ்', 'எதிலும் தமிழ்' -