பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தந்தை பெரியார்


சரவையைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும் தினந்தோறும் தொடர்ந்து எழுதி வந்தார்.

பெரியாரின் முன்னுக்குப் பின் முரணான செயல் பலரை வியப்பிலாழ்த்தியது. எண்ணற்றவர்கள்;

நேற்றுவரை 10 ஆண்டு காலம் காங்கிரசையும் காமராசரையம் ஆதரித்தவர்; திடீரென்று இப்படி அண்ணாவின் பக்கம் திரும்பிவிட்டாரே' - என்று கேள்விக் கணைகளையும்; கடிதக் கணைகளையும் தொடுத்தனர்.

ஆனால் - தனக்குச் சரி என்று பட்டத்தை எடுத்துக் கூறவோ, எழுதவோ என்றுமே தயங்கி அறியாதவர் தந்தை பெரியார்.

ஆயினும் பெரியாரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணமானவர் அறிஞர் அண்ணா என்பதை தன்னுடைய நண்பர்களிடம் பெரியார் எப்படிக் கூறினார் என்பதை பெரியாரின் வாய்மொழியாகவே கேட்போம்.

"மானத்தையே தியாகம் செய்ய வேண்டிய சங்கடமான நிலையில் நான் இருந்தேன். அண்ணா பெருந்தன்மையுடன் அந்தச் சங்கடத்தை எனக்குத் தராமல் மிக்கப்பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார்."

"தொடர்ந்து நானும் காமராசருடன் சேர்ந்து அவரை எதிர்க்க முற்பட்டால் இராஜாஜியை நம்பித்தான் அவர் ஆட்சி நடத்த வேண்டும்."