பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

167


அண்ணாவின் உடல்நிலை சரியில்லாததால், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று டாக்டர்களும் நண்பர்களும் கூறினர்.

அண்ணா பிடிவாதமாக விழாவில் கலந்து கொண்டு; அற்புதமாக உரையாற்றி பல்லாயிரக் கணக்கான மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். பின்னர் ராஜாஜியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.

பொங்கல் புது நாளில், கலைவாணர் சிலை திறப்பு விழா நடந்தது. அதிலும் பிடிவாதமாக அண்ணா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அடுத்த வாரம் அண்ணா படுத்த படுக்கை ஆனார். அமெரிக்க டாக்டர்கள் வந்தனர்.

புற்றுநோய் மருத்துவமனையில் அண்ணாவுக்கு சிகிச்சை நடந்தது.

எதுவும் பலன் அளிக்கவில்லை. 2.2.69 அன்று இரவு 12.20க்கு அண்ணாவின் உயிர் பிரிந்தது. பெரியார் இடி விழுந்த மரம் போல் கலங்கிப் போனார்.

அண்ணாவின் ஆட்சியை, கலைஞர் கருணாநிதி தொடர்ந்தார்.

12.11.1971-ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியாரை 'இரணியா' என்னும் குடல்வாத நோய் பெரிதும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. பெரியார் தன் உடல்நலனைப் பொருட்படுத்தாமல்