பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. பூத்துக் குலுங்கும் பகுத்தறிவுப் பூங்காவின் நுழைவாயில்

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.

பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், அத்தொண்டிற்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே எண்ணுகிறேன்.

என் கருத்துக்கள் பாராட்டப் படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துக்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம்.

- தந்தை பெரியார்

அன்பார்ந்த குழந்தைகளே...

மாணவ மணிகளே...

நீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது.

சமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக