பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

25


தமிழ் மக்களிடையே விஷம் போல் பரவி வந்த சாதி வெறியையும்; மூடநம்பிக்கைகளையும்; ஆதிக்க வெறியையும் அடியோடு அகற்றிட வேண்டித் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார்.

அவரது பகுத்தறிவு நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை, அடுத்து வரும் அத்தியாயங்களில், படித்து மகிழலாம் வாருங்கள்.


2. தந்தை பெரியார் பிறந்த
மண்ணின் பெருமை

பிறந்த மண்ணின் பெருமை...

“நம் நாட்டுக்கு மனிதன் செய்ய வேண்டிய முக்கிய தொண்டு மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்குவதுதான்.

நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தப் பற்றுமின்றி மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்கு தடையின்றிச் சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும் பொறுப்புமாகும்.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற உதவ வேண்டும்.

மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் என் ஆசை.”

- தந்தை பெரியார்

பூவுடன் சேர்ந்த நார் மட்டுமல்ல; சில பெயர்களுடன் சேர்ந்த ஊரும் மணம் பெறும்.