பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

33



தோறும் இரவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பண்டிதர்களைக் கொண்டு உபன்யாசம் செய்வித்துக் கேட்டு மகிழ்வார். இதற்காக பல அன்பர்களும் அங்கு வருவார்கள்.

தெய்வபக்தியோடு வெங்கடப்ப நாயக்கர் இளகிய மனமும், கருணை உள்ளமும் கொண்டவராகத் திகழ்ந்தார். அதனால் -

தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை அவர் ஒரு போதும் மறந்ததில்லை.

ஏழை எளியவர்களுக்குத் தாராளமாகத் தானதருமங்கள் செய்தார். வியாபாரத்தில் நொடித்துப் போன சிறிய வியாபாரிகளுக்குப் பொருள் உதவி செய்து கைதுாக்கி விட்டு அவர்களுக்குப் புது வாழ்வளித்தார்.

தான் ஏழ்மையில் பிறந்து வறுமையில் வாடிக் கஷ்டப்பட்டது போல; பிறர் அத்துன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்று எண்ணினார்.

பசியின் கொடுமையை நன்கு அறிந்திருந்த அவர்; ஏழைகளுக்கான அன்னதானச் சத்திரங்கள் வைத்தார்.

வழிப்போக்கர்கள் தங்குவதற்கும்; இரயில் பயணிகள் தங்குவதற்கும் ஆங்காங்கே தரும சத்திரங்கள் கட்டினார்.

ஆலயங்கள் நிறைந்த ஊரில் தன் பங்கிற்கும் ஓர் பிள்ளையார் கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்தார்.

இத்தனைக்கும் பிறகும் வெங்கடப்ப நாயக்கரின் உள்ளத்தில் திருப்தி ஏற்படவில்லை.