பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தந்தை பெரியார்



இவரால் வகுப்பாசிரியர்களுக்குப் பெருந்தொல்லையாகி விட்டது.

பெரிய இடத்துப் பிள்ளை அதிகம் தட்டிக்கேட்டு, கண்டித்து அடிக்கவும் முடியாது. எப்படி இராமசாமியைத் திருத்துவது; என்று ஆசிரியருக்குப் புரியவில்லை.

கிருஷ்ணசாமி தன் தந்தையிடம், ஒருநாள், தம்பியைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் கூறி விட்டார்.

அப்போது சின்னத்தாயம்மையாரும் அருகில் இருந்தார்.

தன் கணவர் இத்தனையையும் கேட்டு கோபித்து பிள்ளையை அடித்துவிடக் கூடாதே என்று பயந்தார். சட்டென்று:

"நான் இராமசாமிக்கு நல்ல புத்திமதிகள் சொல்லிக் கொடுத்துத் திருத்துகிறேன் இனிமேல் அவன் நல்ல பிள்ளையாகப் பள்ளிக்கூடம் போவான்; ஒழுங்காகப் படிப்பான்" என்று அவர்களிடமிருந்து மகனைத் தனியே அழைத்து வந்துவிட்ட சின்னத் தாயம்மையார், மகனைத் தன் அருகில் அணைத்தபடி அமர்த்திக் கொண்டார். மிகவும் அன்பான குரலில் குழந்தை இராமசாமிக்குப் புரியும்படியாகப் பல விஷயங்களை விளக்கிக் கூறினார்:

"இராமசாமி நீ நல்ல பிள்ளை, அல்லவா? அது எனக்குத் தெரியும். அண்ணனின் பேச்சை அப்பா நம்பினால் நம்பட்டும்; நான் நம்ப மாட்டேன்."