பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உனக்கு ஒண்ணுமே தெரியாமத்தான் இப்படி அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசறே.”

"சரி... என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்.”

"நம்ம வீட்டுக்கு கதை சொல்ல வந்த சுப்ரமண்ய சாஸ்திரிகிட்டே இவன் கேட்டிருக்கான். 'ஏன் ஐயா, ராமர் ராச்சியம் வேண்டாம்னு சொல்லிட்டார்னா பரதன் ஆள வேண்டியதுதானே. அதில்லாமே, ராமரோட செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்திலே வச்சு, அது ஆளுதூன்னா; செருப்பாலே எப்படி ஐயா அரசாட்சி பண்ண முடியும்னு" கேட்டிருக்கான். என்று கணவர் கூறி முடிப்பதற்குள், தாயம்மையார் குறுக்கிட்டுக் கேட்டார்.

"ஆமாம்... அதிலே என்னதப்பு? அவன் பச்சப்புள்ளதானே? தெரியாத விசயத்தைக் கேட்டிருக்கான்; சாஸ்திரி அவனுக்கு விளக்கி பதில் சொல்லியிருக்க வேண்டியதுதானே? சும்மாவா வந்து இராமாயணம் படிக்கறாரு?”

"இதோ பாரு... தாயம்மா அத அவரு அவனுக்கு விளக்கிட்டாரு, ஆனா நம்ம வீட்டுக்கு வந்து கதை படிக்கறவங்க எல்லாம் ஒண்ணும் சாமானிய ஆளுங்க இல்லே; பெரிய பெரிய வேதம் படிச்சவங்க, சாஸ்திரம் தெரிஞ்சவங்க பணம் குடுக்கறோம்கறதுக்காக மட்டும் அவங்க நம்ம வீட்டுக்கு வரல்லே...

நாமல்லாம் கடவுள் பக்தி உள்ளவங்க, நமக்குப் புரியாத பல புராண விஷயங்களை விளக்கிச் சொல்லணும்கறதுக்காகத்தான் வர்றாங்க. அதைக்