பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

55



8. கண்ணீரும் ... தண்ணீரும்

"மூடநம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே, உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வங்தது.

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாதே என்று கவலைப் படுகின்றவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக புத்திசாலிகளாவோம்.

நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள்."

- தந்தை பெரியார்

இராமசாமிக்கு, நிமிச நேரத்தில் அங்கு நிலவிய, சூழ்நிலையின் இறுக்கம் புரிந்துவிட்டது - இரண்டு அன்பு உள்ளங்கள், நட்போடு ஒன்றாய்ப் பழகுவதற்குக் கூட ஒரு தகுதி வரையறுக்கப்பட்டிருந்தது.

உயர் சாதியினர், அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்பவும்: கீழ்ச் சாதியினர் அவர்களுக்குச் சமமானவர்களுடன்தான், நட்பும் உறவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் - கீழ்ச்சாதிக்காரனை மேல் சாதியினர் பாகுபாடின்றி - யார் வேண்டுமானாலும் தங்களுக்கு அடிமைபோல் ஆண்டு அனுபவிக்கலாம். இது எந்த விதத்தில் நியாயம்? - என்று இராமசாமி எண்ணிக் கொண்டிருக்கும் போதே -

காளி மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.

"அம்மா... இவருதாம்மா என்னோட சினேகிதரு நம்ம அப்பாரு கூட இவங்க பண்ணையிலேதாம்மா