பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தந்தை பெரியார்


  அயலார் எதிர்ப்புக்கு அணையாவிளக்கு"
   தொண்டு ஒன்றே - வாழ்வின் குறிக்கோள் -
   எப்பொருளிலும் மெய்ப்பொருள்கண்டமுனிவன்-(புத்தன்)
   தரங்கெட்டவரின் வசவைப் பொறுத்தவர்
   மனப்பிழை இன்றி நடந்த மனிதர்
   ஆசைகளை அடக்கி உயர்ந்த அறிஞர்
   மயக்கம் இல்லாத நல்லறிவாளர்
   பொது நன்மையினால் கேடு வருகுது என்றால்
   அக்கேட்டைக் கேட்டுப் பெறும் தலைவர்
   ஊக்கம் மிகுதியே வலிமை எனக் கொண்டவர்
   சிங்திப்பார்- தெளிவார்- உறுதியாய்ச்சொல்வார் -
   அதிராத மனிதர் -
   மனம் இனிக்கப் பழகும் மாமேதை -
   சமுதாயப் பண்பின் சரித்திரம்.
   ஒளிக்காத மனமும், உயர்ந்த கடமை உணர்வும்
   ஒரு சேரக் கொண்ட உயர்தமிழர்.


இவரே பெரியார் -

திரு. நீலமணி அவர்கள் - நிலவைக் குழந்தைக்கு காட்டிச் சோறு ஊட்டுவது போல் - பெரியாரைப் பல்வேறு நிலைகளில் காட்டுவார். சிந்தனை அமிழ்தை ஊட்டுவார்.

பெரியாரின் கருத்துக் குவியல்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு பகுதியிலும் - தொடக்கத்தில் பதிவு செய்துள்ள பாங்கு மிகச்சிறப்பாக உள்ளது.

நான் யார்? என்ற வினாவிற்குப் பெரியாரின் கூற்றை வருமொழியாக்கி வரைந்திட்ட தொடரின் தொடக்கம்.