பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தந்தை பெரியார்


செந்தாமரைப் பூவின் அழகையும், மணத்தையும் மனிதன் நேசிக்கிறான். அந்தப் பூவும் அவனுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் - அது பிறந்த சேற்றையும், சகதியையும் மட்டும் கேவலமாக வெறுக்கிறான்; அசிங்கமாகக் கருதுகிறான்.

சேரியைக் கடந்து வெகுதூரம் வந்த பிறகும் அவரால் காளியையும், அவன் தாயாரையும் மறக்க முடிய வில்லை.

காளியும், அவன் அம்மாவும் அவர் கண் முன் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். வழியெல்லாம் அவர்களைப் பற்றிச் சிந்தித்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

எவ்வளவு புத்திசாலியான பெண்மணி காளியின் அம்மா. 'வாதம் பேசினா நாங்க வாழ முடியாது'ன்னு வாழ்க்கையின் எதார்த்தத்தை - தங்களின் இயலாமையை, எவ்வளவு இயல்பாய், இரண்டே வார்த்தைகளில் கூறிவிட்டாள்.

இந்த சாதிப்பிரிவு, இவர்களை எவ்வளவு கொடுமையாய் அடக்கி வைத்திருக்கிறது;

அவள் கட்டியிருந்த கிழிந்த நூல் சேலைக்குப் பதில் - பட்டுப் புடவையும்; பொன் நகைகளையும் பூட்டித் தன் வீட்டுக் கூடத்தில் கொண்டு போய் நிறுத்தினால் -

அழகிலும், அறிவிலும், காளியின் தாயார், தன் தாய்க்கு எந்த விதத்தில் தாழ்ந்து நிற்பாள்?

தன் ஆசை மகனைக் கைவலிக்க அடித்து விட்டு; அப்படி யாருக்காகவோ, எதற்காகவோ அடிக்க