பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

61


நேர்ந்ததை எண்ணி, அந்தத்தாய் தன் மகனைக் கட்டிக் கொண்டு அழுதாளே!

தன் தாயார் தங்களிடம் செலுத்துகிற அன்பிற்கு இது எந்த விதத்தில் குறைந்து போயிற்று. சிந்திக்கத் தெரிந்த இப்படியொரு அம்மாவைப் பெற்ற காளி அதிர்ஷ்டக்காரன்தான்.”

அந்தத் தாயைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போலிருந்தது இராமசாமிக்கு.

இப்படிப் பலவாறு எண்ணியபடி, கால்கள் போன போக்கில் சென்று கொண்டிருந்த இராமசாமிக்கு அப்போதுதான் புரிந்தது - தன்னுடைய வகுப்பு வாத்தியார் வசிக்கும் தெருவழியே போய்க் கொண்டு இருக்கிறோம் என்பது.

அந்தத் தெருவிற்கே வரக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவர் இராமசாமி.

ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில், சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ராமசாமியைப் பார்த்துவிட்டு,"பள்ளிக்கூடம் போகாமல்; நாயக்கர் பிள்ளை ஊரைச் சுத்திட்டுப் போறான் பாரு" என்று அவர்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டது அவர் காதில் தெளிவாக விழுந்தது.

அதை இலட்சியம் செய்யாமல் அவர்களைத் தாண்டி, தன்னுடைய வாத்தியார் வீட்டு வாசலைக் கடக்கும்போதும் - இராமசாமி ஒரு கணம் அந்த வீட்டையே வெறிக்கப் பார்த்தபடி நின்றார்.

விட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. விசாலமான திண்ணை வெறிச்சோடிக் கிடந்தது.