பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தந்தை பெரியார்


மாலை வேளைகளில், சில பணக்கார வீட்டுப் பிள்ளைகள், தனியாகப் பணம் கொடுத்து அந்தத் திண்மையில் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கற்றுக் கொள்வதுண்டு.

அந்த வீட்டைப் பார்க்கப் பார்க்க இராமசாமியின் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கி எழுந்தது. தன் இதயத்தை யாரோ பலம் கொண்ட மட்டும் கசக்கிப் பிழிவது போலிருந்தது.

அந்த வீட்டைக் கோபமாகப் பார்த்தபடி வேகமாகக் கடந்து மேலே சென்றார்.

எத்தனை முயன்றாலும் நெஞ்சிலே பட்ட வடுவாக அன்று நடந்த சம்பவத்தையும் -

அதனால் தன் மனம் அனுபவித்த மிகப் பெரிய வேதனையையும், அவரால், ஒதுக்கித் தள்ளி விடவோ; மறக்கவோ முடியவில்லை. அந்தச் சம்பவம் இதுதான் -

- ஒரு நாள்

எங்கேயோ போய்விட்டு அந்தத் தெரு வழியாக இராமசாமி வந்தபோது வாத்தியார் வீடு திறந்திருந்தது. இராமசாமிக்கு அப்போது மிகவும் தாகமாயிருந்ததால், வீட்டினுள் சென்றார்.

குடிக்கத் தண்ணிர் கேட்டார். வாத்தியாரின் மகள் செம்பு நிறைய நீர் கொண்டு வந்து டம்ளரில் ஊற்றினாள். இராமசாமி அதை வாங்கக் கை நீட்டியபோது, டம்ளரைக் கையில் கொடுக்காமல் தரையில் வைத்தாள்.