பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

65


தன் வீட்டில் வேற்று சாதிக்காரர்களைச் சேர்க்க மாட்டார்.

அவர்களுக்குத் தண்ணீரோ - உணவோ கொடுக்க வேண்டியிருந்தால் கூட, 'ஆசிரியரின் மனைவிக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்தவளில்லை’ என்பது போல் நடந்து கொள்வார்.

இவற்றையெல்லாம் வெறுப்போடும்; வேதனையோடும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அந்த வயதில் அவரால் என்ன சீர்திருத்தம் செய்துவிட முடியும்? இதனால் -

தங்களை மட்டும் உயர் சாதியினர் என்று கூறிக் கொள்கிறவர்கள் அனைவர் பேரிலுமே நாளுக்கு நாள் இராமசாமியின் உள்ளத்தில் ஒரு தார்மீகமான வெறுப்பும், கோபமும் வேகமாக வளர்ந்து பெருகிக் கொண்டே வந்தது.

குமுறிக் கொண்டிருக்கிற எரிமலை எனறாவது ஒரு நாள் வெடிக்காமலா போகும்! அதற்கான காலம், நேரத்திற்காகவே அன்றிலிருந்து இராமசாமி காத்துக் கொண்டிருந்தார். தாழ்ந்த சாதியினர் என்று மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் முன்னிலும் அதிகமாக ஒட்டுறவுடன் பழகினார்.

சலீமைத் தொடர்ந்து இராமசாமிக்குப் பல முஸ்லிம் இளைஞர்கள் நண்பர்களானார்கள்.

காளியைப் போல பல பிள்ளைகளைத் தேடிப் பிடித்து கொண்டார்.

கையில் உள்ள தன் காசுக்குச் சேரிப்பிள்ளைகளுக்கு எதையாவது வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார்.