பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தந்தை பெரியார்


- ஒரு பெண் வெற்றி பெற்றாள் என்றால் அதற்கு அவரது உள்ளத்தில் எவ்வளவு உறுதி இருந்திருக்கி வேண்டும்!

நாகம்மையார் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கவில்லையே தவிர பொது அறிவும், பொறுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவரிடம் இயற்கையாகவே இருந்தது.

இப்படியொரு பொறுப்புள்ள அருமையான மனைவி கிடைத்ததினால்தான் இராமசாமிக்கு இஷடப்படி பொதுவாழ்வில் ஈடுபட்டு உழைக்க முடிந்தது.

திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1904-ம் வருடம் நாகம்மையார் ஓர் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

அனைவருடைய அன்புக்கும் ஆசைக்கும் பாத்திரமாயிருந்த அந்தக் குழந்தை ஐந்தே மாதங்களில் இறந்து போய் விட்டது. அதற்குப் பிறகு இராமசாமி தம்பதியருக்குக் குழந்தையே பிறக்கவில்லை. இந்த சோகம் நாகம்மையைப் பெரிதும் வருத்தியது.

இராமசாமி எதைப் பற்றியும் கவலைப் படாதவராகவே வாழ்ந்து வந்தார். நினைத்த போது கடைக்குப் போவார். மற்ற நேரங்களில் நண்பர்களுடனேயே பொழுதைக் கழிப்பார்.

எப்பொழுது பார்த்தாலும் எதைப் பற்றியாவது யாருடனாவது வாதம் செய்து கொண்டிருப்பார். வீட்டில் தனக்காக ஒரு மனைவி காத்திருக்கிறாளே என்கிற நினைப்பே அவருக்கு இருக்காது.