பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தந்தை பெரியார்


தன் யோசனையைப் பொது நலன் கருதி ஏற்க வேண்டுமென்று எடுத்துக் கூறினார்.

சிலர் இதை வரவேற்றாலும் பலர் எதிர்த்தனர். பணக்காரர்களின் பகையையும் பழைய கடைக்காரர்களின் விரோதத்தையும் சந்திக்க வேண்டிவரும். அதற்குப் பணிந்து பிறகு திட்டத்தை நிறுத்துவதை விட இதை ஆரம்பிக்கவே வேண்டாம் என்று அவர்கள் கூறினார்கள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் ஈ.வே.ரா. எதிர்ப்புகளைக் கண்டு என்றுமே அஞ்சியவரல்ல அவர்.

பெருமைக்காகப் பதவி வகிப்பதை விட மக்களுக்கு நன்மை செய்வதன் மூலம் பதவியை இழந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினார்.

உடனே 'நில ஆக்கிரமிப்பு' என்னும் பெயரால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் பெரிய பெரிய மாடிக் கடைகளையும் இடித்துத் தள்ளினார். கடைத் தெருவைத் தேவையான அளவிற்கு அகலப் படுத்தி விட்டார்.

பொதுமக்கள் கடைத்தெருவின் அழகைக் கண்டு வாயாரப் புகழ்ந்து பாராட்டினர். பணக்காரக் கடைக்காரர்களும் தற்சமயம் ஏற்பட்டுள்ள அதிகமான செளகரியங்களை உணர்ந்து சமாதானமாகி விட்டனர்.

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே ஈ.வே.ரா. எடுத்த முடிவு இன்றும் அவர் புகழ் பரப்பும் அழகிய கடைத் தெருவாக காட்சியளித்து வருகிறது.