பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மனந்தார் இல்லறமாகிய கல்லறம் மேற். கொள்ளல். வாழ்க்கைத் துணை பாய் வந்து வரலாறு பகடித்த வீரப் பெருமாட்டி-பெரியாரின் முதல் ஆறாண்டு மணவாழ்வு1899 முதல் 1904 வரை. AiAMMMAMMMMMeAAA AAAA SAAAAS AAAAA AAAA MM MMM AAAA AAAAS ABS S0S ee e SAAAASSSS S S ~~4ు.ఉళ్నోసో** முரட்டுத்தனமாய்த் துள்ளித் திரிந்து, மிாட்டி வரு கின்ற காளை மாட்டுக்கு, முக்கணாங்கயிறு மாட்டுவது போலத், துடுக்கு மிகுந்த பிள்ளையை அடக்கிய-, இாம சாமிக்கு மணம் பேச முனைந்தனர், வெங்க... நாயக்ககும் சின்னத்தாயம்மாளும். வயதோ பத்தொன்பது; பிறந்ததோ செல்வந்தர் வீட்டில்; நண்பர்களோ, எதற்குத் துணிந்த வர்கள்; சுபாவமோ கட்டுப்பாடற்றது! இந்தச் சூழ்நிலையில் இராமசாமியின் நாட்டம் விலைமாதர் இல்லங்களை நோக்கிச் செல்லத் தொடங்கிற்று எனப் பெற்றோர் கேள்வி யுற்றபின் வாளா இருப்பரோ? செல்வச் செருக்கில் செம் மாந்து நிற்கும் தமது செழுமைக்கேற்ற நல்வளமை நிறைந்த இடத்தில், இளமையும் எழிலும் பொருந்திய பெண் கிடைக்குமா, என உறவினர்க்கெல்லாம் துது விடுத்தனர். பெற்றோர் பார்த்து யாரை யாருக்குக் கட்டி வைக் கிறார்களோ, வெட்டிப் பேசாமல், அட்டியின்றி அதனை ஏற்று, ஒட்டிப் போகும் பண்பாடும் பழக்கமும் நிலவி வந்த குடும்பம்; காலமோ இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி கூட முளைக்காத நேரம் இந்தச் சுற்றுச் சார்பில் வளர்ந்த