பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தான்; பெண்ணடிமை தீர்வதற்குப் பெண்கள் தாலி அணியாப் போராட்டம் நடத்தவேண்டும் என்பது இராம சாமியாரின் பிற்காலக் கொள்கை. இதற்கான முளை அப்போதே அவர் மூளையில் தோன்றிவிட்டது போலும்! பழங்காலப் பழக்கவழக்கங்களில் தோய்ந்து, பிடிவாதமாக, மாற்றங்களுக்கு இடங் கொடுக்காமல், மற்றவைகளை ஒரளவு விட்டுக் கொடுத்தாலும், இன்னமும் தாலியணியும் பழக்கத்தைத் தாய்மார்கள் விடாப் பிடியாய்க் கையாண்டு வருகிறார்கள். தாலியே பெண்களுக்கு வேலி என்று, ஆண்கள் வேலிதாண்டுவதற்கு அனுமதியாகப், பழமொழி ஒன்றும் வழங்குவார்கள். கணவரிடம் மதிப்பு, மரியாதை குறைத்திடும் பெண்டிரும், தாலியிடம் குறைக்கமாட்டார் களே! புனிதம், தெய்வீகம், மங்கலம் இப்படியாக-மஞ்சள் மகிமை தாலிக்கு மிகவும் உண்டு ! இவ்வாறு போற்றிப் பாதுகாக்கப்படும் தாலியை வைத்து இராமசாமி, ஒரு சிறு விளையாட்டு நடத்தினார். இரவு நேரம். உல்லாச வேளை, சல்லாபம் நடக்கிறது. எல்லாமே இன்பமயம். தாலி எதற்கு இடையூறாக இந்த வேளையில் என்பதாகக் கொஞ்சிப் பேசிய இராமசாமி, தயங்கித் தடுத்த நாகம்மையாரை வஞ்சகமாய்ச் சரிக்கட்டி, அவருடைய தாலியைக் கழற்றித் தம் சட்டைப் பையில் வைத்துக் கெர்ண்டார். காலையில் மறந்ததுபோல், அதே சட்டையைப் போட்டுக்கொண்டு கடைக்கும் போய் விட்டார். உறங்கி எழுந்தபின், நினைவின்றி இருந்த அம்மை யாருக்குத் தம் கணவர் வெளியிற் சென்ற பின்னரே, தாலி யின் நினைவு எழுந்தது. திடுக்குற்றவராய், அக்கம் பக்கம் பார்த்துத் தமது புடைவை முன்தானையால், கழுத்தினை மூடி மறைத்துக் கொண்டார். எவ்வளவு நேரத்துக்கு இது இயலும் தமது பதற்றத்தினாலேயே, வெறுமையான கழுத்தை வெளியே காட்டிக் கொண்டார். கேலியாகவும் கடுமையாகவும். மற்ற பெண்டிர், தாலி எங்கே என்று கேட்டபோது, அம்மையார் தாமே முந்திக் கொண்டு, சமா தானம் கூறினார். சணவர் நல்லபடியாக ஊரில் இருக்கும்