பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணியாற்றும் பல்துறை அறிஞர், பல்கலைச் செம்மல் பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் மிகுந்த ஆராய்ச்சிப் பாங்கோடு தந்தைப் பெரியாரைப்பற்றி அரியதொரு ஆய்வுப் பேருரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகளைத் தொகுத்து ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ எனத் தலைப்பிட்டு மிகச் சிறந்த இந்த நூலை உருவாக்கியுள்ளார். திருமிகு வே.ஆனைமுத்து அவர்களின் ‘ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற நூலை தமிழுலகம் நன்கறியும். அது ஒருமுறையில் சம்பிரதாயப் போக்கில் அமைந்தது. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் புதிய நோக்கிலே, புதிய சிந்தனையுடன் தந்தை அவர்களின் சிந்தனைகளை நூலாக அமைத்து வெளியிடுவதை எண்ணி நெஞ்சு மகிழ்கின்றேன்.

ஈ.வெ.ரா. அவர்கள் தொடாத துறைகள் இல்லை. அவர் தொட்ட துறைகள் துலங்காமல் போனதும் இல்லை. அத்தகையாரின் சிந்தனைகளை மூன்று பெரும் தலைப்புகளின்கீழ் அமைத்து ஈ.வெ.ரா.வின் கொள்கைகளில் உள்ள ஆழ்ந்த சிந்தனைகள் என்ன என்பதை தமிழுலகிற்கு நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

பெரியாரின் சிந்தனைகளில் முதலிடம் வகிப்பது கடவுள் மறுப்புக் கொள்கை. தந்தை பெரியார் என்றாலே கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர் என்றுதான் இன்றும் தமிழுலகம் எண்ணிக் கொண்டுள்ளது. அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளின் பின்னணியில் அமைந்த அடிப்படைக் காரணங்களை மிக விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார் பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள்.

தமிழினை முட்டாள் ஆக்குவது கடவுள்; அதை ஒழிப்பதுதான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான் எங்கள் வேலை. (ப. 42)

“மனிதனை இழிவுபடுத்துவதற்கும் பகுத்தறிவற்ற தன்மைக்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக அமைவதால் அதை ஒழித்துக்கட்ட வேண்டும்; கடவுள்மேல் எங்களுக்கு எவ்வித கோபமும் இல்லை” என்ற வரிகளின் மூலம் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையின் பின்னணியில் மனித சமுதாயத்தின் உயர்வுதான் அடிப்படையாக அமைந்துள்ளது என நிறுவுகிறார் நூலாசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள். சமயம் என்ற நிலையில் பெரியார் அவர்கள் “மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு

VIII