பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விரோதி - மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி - மதமே மனித சமூக சமதர்மத்திற்கு விரோதி” (ப. 45) என்றும் “இன்று மதமானது ஒருவரையொருவர் ஏய்க்கப் பயன்படுத்தப்பெறுகின்றதே அல்லாமல் தொல்லையில்லாதிருக்க நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை. போலி வாழ்க்கைக்காரருக்குத் திரையாகவே மதமும் பத்திரிகையும் உதவுகின்றன” (ப.45) போன்ற பெரியாரின் சிந்தனைகளை தம் நூலில் ஆணித்தரமாகக் கூறி நிறுவுகிறார் நூலாசிரியர்.

“மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடைசெய்தால் அஃது எந்த மதமாக இருந்தாலும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்; என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்” என்று கடவுள்மேல் பழிபோடும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்”(பக். 49) என்று தந்தை பெரியார் சிந்தித்ததை தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

தந்தை பெரியாரின் சமூகச் சிந்தனைகளை இரண்டாவது தலைப்பின்கீழ் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் நூலாசிரியர். சமூகம் என்ன என்பதைப் பெரியார்வழி நின்று விளக்குகிறார். மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்லன் - அப்படி வாழவும் அவனால் முடியாது; இங்ஙனம் வாழ்நாள் முழுவதும் சமூகப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பெரியார். “நான் ஒரு நாத்திகன் அல்லன், தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியும் அல்லன்; தேசாபிமானியும் அல்லன்; ஆனால் தீவிர சீவாதார எண்ணமுடையவன். எனக்குச் சாதி என்பதோ உயர்வு தாழ்வு என்பதோ இல்லை; அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன்; ஆதரிப்பவன் அல்லன்.” (ப. 57) எனக் கூறும் பெரியாரின் உள்ளக்கிடக்கையை நூலாசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.

இதுபோன்று நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சிமுறை இருக்கவேண்டும்; திருமணம் எப்படி அமையவேண்டும்; திருமணத்திலுள்ள சமூக இழிவுக் கொடுமைகள் எப்படி ஒழிய வேண்டும்; மற்றும் மதுவிலக்கு ஆகியன பற்றிய பெரியாரின் சிந்தனகளை இந்நூலில் மிகவும் விரிவாக ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர்.

மூன்றாவது நிலையில் தமிழ் மொழியின்மீது அவர் கொண்ட எண்ணம் என்ன என்பதை விளக்குகிறார். பெரியார் ஒரு

IX