பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v


- இத் தனிப்பாசுரத்தொகை அன்ன வொழுக்கத்தினேயே மேற்கொண் டுளது. ஆங்கில நூற் பயிற்சியுடைய தமிழ் மக்கள் தமிழ்மொழியைப் பெரி தும் கவனித்தலின்றிக் கைசோர விடுகின்றனரெனப் பலருங்கூறும் வசை மொழி எம் செவிப்படலும் மனம்பொறேம், புதுமை வழியால் ஏதேனும் செய்யவேண்டுமென்று புகுந்தேம். அங்ஙனம் புக்குழி"யாம் அவ்வக்காலங். களிற் சிற்சில விடயங்களைப்பற்றிக் கொண்ட கருத்துக்களைச் செய்யுளுருவ மாய்ச் செய்து வெளியிடலாமென்று உன்னினேம். அவ்வாறே அவ்வக் காலத்துச் செய்த பாசுரங்களை ஞானபோதினி யென்னுமொரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வாயிலாய்ச் சிறிது சிறிதாக வெளிப்படுத்தினேம். இதுகண்ட சில தமிழபிமானிகளும் எமது நண்பரும் அவையனைத்தையும் ஒாாற்ருற்ருெகுத்துத் தனியே ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்று வேண்டினர். அன்னர் வேண்டுகோட்கிணங்கி வெளியிடப்புகுந்த யாம் இப் பாசுரங்களிற் சில புதுக்கருத்துக்கள் காட்டியிருக்கின்றமைபற்றி அஞ்சுவேம், எமது மெய்ப்பெயரின் வெளியிடாது பரிதிமாற் கலைஞன் என்னும் புனேவு பெயரின் வெளியிடுவேமாயினேம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூலொன்று செய்தானது உயர்ச்சியாற் சாலவும் புகழப்பட்டிலங்கலும் நாடொருங் காண்டலின் இந் நூலைப்பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனத்து என்றுணரவேண்டி யும் அவ்வாறு செய்ய விரும்பினேம். அன்னணம் வெளிப்படுத்திய நூல் கண்டு பலரும் உவந்து வியந்து பேசக்கேட்ட யாம் உள்ளக் கிளர்ச்சியுற்று


நூலிற்கு மறுபதிப்பொன்று வெளியிடலாமென்றெண்ணினேம்.


இவ்வாறெண்ணிக் கொண்டிருப்புழி ஆங்கில நாட்டிற் கோதீர்த்த புரிச் சர்வகலாசாலையில் தமிழ்ப்புலமை நடாத்தும் கனம் பொருந்திய ஜி. யூ. போப்பையர் அவர்கள் இதனைப்பற்றி வியந்துபேசி இந் நூற் பாசுரங்க ளனத்தையும் ஒாாற்ருன் ஆங்கில பாஷையில் மொழி பெயர்த்து அனுப்பி ஞர்கள். அவர்தங் கருணைத்திறத்திற்கு யாஞ் செய்யக்கடவ கைம்மா றென்னே! இஃதுணர்ந்த நண்பர் யாவரும் இந்நூலை அவ்வாங்கில மொழி பெயர்ப்புடனுஞ் சேர்த்து அச்சிடுதல் வேண்டுமென்றனர். அவ்வாறே அச்சி டப் புகுந்த யாம் இதன்கனுள்ள பாசுரங்களனைத்தையும் ஒழுங்குபடுத்தி முறைப்பட வைத்தனம். அங்ஙனம் வைப்புழிப் பின்னர்த் தோன்றிய கருத் துக்களுக்கேற்பச் சிற்சில விடங்களில் மாற்றியும் மொழிபெயர்ப் பாசிரியர் கூற்றுக்கிணங்கச் சிலவற்றை யியைத்து மிருக்கின்ருேம். இவையே முதற் பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்குமுள்ள வேறுபாடு.


மற்று, இதன் பாசுரங்க ளனைத்தும் தனித்தனி பதினுலடி யளவின வாய்ப் பலவேறு வகைய பொருள் பொதிந்தனவாம். இன்ன செய்யுட்கள்


இன்னுஞ் செய்தற் கிடனுண்டெனக் கோடலிற் சிறியேம் இதனை முதல்